2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதுமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக்குகள் வர இருக்கிறதா!!

2021 தீபாவளியை அலங்கரிக்கும் விதமாக நாட்டில் புதுமுக இருசக்கர வாகனங்கள் அறிமுகமாக இருக்கின்றன. அவைகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

2021 தீபாவளி பண்டிகையை அலங்கரிக்கும் வகையில் இந்தியாவில் சில புதுமுக வாகனங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில், நமது நாட்டை அலங்கரிக்கும் விதமாக விரைவில் (தீபாவளிக்கு முன்னதாக) விற்பனைக்கு வர இருக்கும் இருசக்கர வாகனங்களின் பட்டியலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

10 இருசக்கர வாகனங்கள் தீபாவளி பண்டியைகை முன்னிட்டு அறிமுகமாக இருக்கின்றன. அவை என்ன மாடல் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். Yamaha Aerox 155 மேக்ஸி ரக ஸ்கூட்டர் தொடங்கி Royal Enfield Classic 350 பைக் வரையிலான இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவல் வழங்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

Yamaha YZF-R15 M மற்றும் Aerox 155

Yamaha நிறுவனம் மட்டுமே இந்திய சந்தையை இரு புதுமுக இருசக்கர வாகனங்களால் அலங்கரிக்க திட்டமிட்டிருக்கின்றன. அந்தவகையில் நிறுவனம் இந்திய சந்தைக்காக ஒதுக்கியிருக்கும் இருசக்கர வாகன மாடல்களே YZF-R15 M மற்றும் Aerox 155 ஆகியவை ஆகும். இதில், YZF-R15 M என்பது பைக் ரக இருசக்கர வாகனமாகும். மற்றொன்று Aerox 155 மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகும்.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

Yamaha நிறுவனம் YZF-R15 M பைக்கை பிரீமியம் இருசக்கர வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் R15 மாடலின் பிரீமியம் வெர்ஷனாகவே அது விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகையால், வழக்கமான R15 பைக் மாடலைக் காட்டிலும் சற்று கூடுதல் சிறப்பு அம்சங்களை YZF-R15 M பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

அந்தவகையில், புரெஜெக்டர் ரக ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், மறு வடிவமைக்கப்பட்ட எக்சாஸ்ட், தங்க நிற பூச்சிலான யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்தில் என பல்வேறு சிறப்பு கருவிகள் அப்பைக்கில் இடம் பெற இருக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

இதேபோல் நிறுவனத்தின்கீழ் எதிர்பார்க்கப்படும் மற்றொரு இருசக்கர வாகனமாக Aerox 155 இருக்கின்றது. இது ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டராகும். R15 பைக்கிற்கு இணையான திறனுடன் இது உலக நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஆனால், இந்தியாவில் இது சற்று குறைந்த திறனுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கின்றது. இதில், எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், எல்இடி ஹெட்லைட், எல்இடி வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

புதிய Bajaj Dominar 400 மற்றும் Pulsar NS250 மற்றும் Pulsar 250F

Yamaha-வைப் போல் Bajaj நிறுவனமும் தனியாளாக புதிதாக மூன்று படைப்புகளை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட Dominar 400, Pulsar NS250 மற்றும் Pulsar 250F ஆகியவையே அவை ஆகும்.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

Dominar 400; இப்பைக்கில் புதுப்பித்தலாக பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையிில், டூரிங் ரக வாகனம் இது என்பதை வெளிக்காட்டும் வகையில் புதிய உயரமான விஷர்கள், ஹேண்டு குவார்டுகள், புதிய பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் என எக்கசக்க அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. எஞ்ஜினை பொருத்தவரை எந்த மாற்றமும் இதில் இருக்காது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

Pulsar NS250; தனது பல்சர் வரசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளின் பட்டியலை அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே இந்த பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர Bajaj திட்டமிட்டுள்ளது. இது ஓர் நேக்கட் ரக பைக்காகும். இப்பைக்கில் 250சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

Pulsar 250F; இந்திய சந்தையில் Bajaj நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் மற்றுமொரு 250 சிசி ரக பைக்காக இது இருக்கின்றது. இதனை புதி ஸ்டைல் மற்றும் காஸ்மெட்டிக்குகளுடன் நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. இப்பைக் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. மிக விரைவில் அறிமுகத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

KTM RC390, RC200 மற்றும் RC125

Bajaj நிறுவனத்தைப் போலவே KTM நிறுவனமும் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக மூன்று புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. RC390, இந்த பைக் மாடலில் நிறுவனம் 373.3 சிசி திறனை வெளியேற்றும் எஞ்ஜினைப் பயன்படுத்த இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 43.5 பிஎஸ் மற்றும் 36 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

இத்துடன் இப்பைக்கில் ஸ்பிளிட் ட்ரெல்லிஸ் ஃப்ரேம்ம, புதிய டிசைன் தாத்பரியம் ஆகியவைப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இப்பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தின் வாயிலாக வெளியாகின. RC200, RC390 சகோதரனாக உருவாகியிருக்கின்றது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

புதிய தலைமுறை RC200 ஆனது RC390 டிசைன் தாத்பரியங்களை அப்படியே கொண்டிருக்கின்றது. அதேசமயம், மிக சிறய மாற்றங்களை மட்டும் அது பெற்றிருக்கின்றது. ஸ்போர்ட் திறனிலான எக்சாஸ்ட், எல்இடி திரை என குறிப்பிட்ட சில சிறப்பம்சங்கள் இப்பைக்கில் இடம் பிடிக்க இருக்கின்றன.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

KTM நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது படைப்பாக RC125 இருக்கின்றது. RC வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் RC125 மாடலை இந்தியாவில் KTM களமிறக்க இருக்கின்றது. இதனை மலிவு விலை பைக்காக இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ர், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என குறைவான சிறப்பம்சங்களையே நிறுவனம் இப்பைக்கில் வழங்கியிருக்கின்றது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

புதுப்பிக்கப்பட்ட TVS Apache RR310

TVS நிறுவனம் அதன் Apache RR310 பைக்கை தற்போது சந்தையில் நிலவி வரும் போட்டிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றது. அந்தவகையில், புதிய அப்டேட்டின் வாயிலாக பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. அட்ஜஸ்டபிள் முன்பக்க சஸ்பென்ஷன், புதிய டிசைனிலான ஹெட்லேம்ப் உள்ளிட்டவை TVS Apache RR310 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

ஆனால், இதன் எஞ்ஜின் மாற்றமும் இருக்காது என தெரிய வந்திருக்கின்றது. 312.2 சிசி எஞ்ஜினே இந்த பைக்கில் இடம் பெறும். அது 34 பிஎஸ் மற்றும் 27.3 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் அறிமுகம் ஆகஸ்டு 30ம் தேதி அரங்கேற இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 தீபாவளியை அலங்கரிக்க இருக்கும் புதமுக டூ-வீலர்கள்... அட இத்தனை பைக் வர இருக்கிறதா!!

Royal Enfield Classic 350

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றாக Royal Enfield Classic 350 இருக்கின்றது. இப்பைக் இந்தியாவில் வரும் செப்டம்பர் 1ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு புதுப்பித்தல்களை இப்பைக் பெற்றிருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. எனவே இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

Most Read Articles

English summary
Top ten two wheelers launching before 2021 diwali
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X