பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்களின் பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாருங்க!!

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்களின் பட்டியலை வழங்கியுள்ளோம். வருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

இந்தியாவில் பைக்குகளுக்கு இணையான திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக அதிக திறன் கொண்ட ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

அந்தவகையில், தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பர் திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் எது?, அதன் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். இப்பதிவில் டாப் 3 அதி-திறன் கொண்ட ஸ்கூட்டர்களைப் பற்றிய தகவலையே தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

டிவிஎஸ் என்டார்க் 125

தமிழகத்தின் ஒசூரை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் வகையில் என்டார்க் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த ஸ்கூட்டர் நான்கு விதமான தேர்வுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

டிரம், டிஸ்க், ரேஸ் எடிசன் மற்றும் சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஆகிய தேர்வுகளிலேயே டிவிஎஸ் என்டார்க் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் நிறுவனம் 124.8 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினே பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 9.1 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

ரூ. 78,257 என்ற ஆரம்ப விலையில் இருந்து டிவிஎஸ் என்டார்க் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆகையால், குறைந்த விலையில் சூப்பர் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டராக இது இருக்கின்றது.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

அப்ரில்லா எஸ்ஆர் 160

அப்ரில்லா எஸ்ஆர் 160 ஸ்கூட்டரே நம்முடைய பட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் அதி-திறன் வெளிப்படுத்தும் ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டரில் 160.3 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு, எஸ்ஓஎச்சி, 3 வால்வ் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.1kW திறனை 7,600 ஆர்பிஎம்மிலும், 11.6 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். ரூ. 1.16 லட்சம் என்ற விலையில் இருந்து இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை ஆன்-ரோடு விலையாகும்.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160

நம்முடைய பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் அதி-திறன் கொண்ட ஸ்கூட்டராக அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 உள்ளது. எஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜினே இதிலும் இடம் பிடித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ. 1.29 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் சென்னை ஆன்-ரோடு விலையாகும்.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

இன்னும் பல 125 சிசி ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை மேலே பார்த்த ஸ்கூட்டர்களைக் காட்டிலும் சற்று குறைந்த அளவிலேயே திறன்களை வெளிப்படுத்தும்.

பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்கள்... இதோ பட்டியல்! இதுல எது உங்களுக்கு பொருந்தும்னு பாத்துக்கோங்க!!

மேலும், இந்தியாவில் இன்னும் சில அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய ஸ்கூட்டர்கள் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. யமஹா என்மேக்ஸ் 155 மற்றும் ஹோண்டா பிசிஎக்ஸ் போன்ற ஸ்கூட்டர்கள் இந்தியாவில் கால் தடம் பதிக்க தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top Three high performance scooters In India. Read In Tamil.
Story first published: Wednesday, May 26, 2021, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X