ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

தமிழகத்தில், ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 347,156 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் இந்த விற்பனை எண்ணிக்கை 2020 செப்டம்பரை காட்டிலும் கிட்டத்தட்ட 6% அதிகமாகும்.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

ஏனெனில் கடந்த ஆண்டு இதே செப்டம்பரில் 327,692 டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 19.42% அதிகமாகும். ஏனென்றால் கடந்த ஆகஸ்ட்டில் டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் குறைவாக 2,90,694 என்றே இருந்தது.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

தற்போதைய 3,47,156 என்கிற விற்பனையில் டிவிஎஸ் மோட்டாரின் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர வாகனங்களும் அடங்குகின்றன. 2-வீலர்ஸை பொறுத்தவரையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 3,32,511 இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 செப்டம்பரில் 3,13,332 டிவிஎஸ் 2-வீலர்ஸும், 2021 ஆகஸ்ட்டில் 2,74,313 டிவிஎஸ் 2-வீலர்ஸும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

இதில் குறிப்பாக 2021 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் டிவிஎஸ் நிறுவனம் சுமார் 58 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் முன்னேறியுள்ளது. 2021 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 35.60 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

ஆனால் டிவிஎஸ்-இன் 3-சக்கர வாகனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக 16,381 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்தில் 14,645 டிவிஎஸ் 3-சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு இதே செப்டம்பரில் இதனை காட்டிலும் சற்று குறைவாக 14,360 3-சக்கர டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட டிவிஎஸ் 3-வீலர்ஸின் எண்ணிக்கை (13,832 யூனிட்கள்) இதற்கு முந்தைய 2021 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 11.41% குறைவு ஆகும். மொத்தமாக கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் 2,44,897 வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே 2020 செப்டம்பரில் 2,42,529 யூனிட்களிலும், 2021 ஆகஸ்ட்டில் 1,80,767 யூனிட்களிலும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

டிவிஎஸ் மோட்டாரின் இருசக்கர வாகனங்களையும், மூன்று சக்கர வாகனங்களையும் சேர்த்து மொத்தமாக கடந்த மாத்தத்தில் இந்த நிறுவனத்தின் 1,02,259 யூனிட் வாகனங்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2021 ஆகஸ்ட் மாதத்துடன் (1,09,927) ஒப்பிடுகையில் 6.98 சதவீதம் குறைவுதான் என்றாலும், 2020 செப்டம்பரை (85,163) காட்டிலும் 20.07% அதிகமாகும்.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

டிவிஎஸ் மோட்டாரின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 1,66,046 யூனிட்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரிலும், 2021 ஆகஸ்ட்டிலும் டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கை முறையே 1.40 லட்சம் மற்றும் 1.34 லட்சம் என்ற அளவில் இருந்தன. அதேபோல் டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் விற்பனையும் அதிகமாகவே இருந்துள்ளது.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

கடந்த 2021 செப்டம்பரில் டிவிஎஸ் பிராண்டில் இருந்து 1,04,091 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிவிஎஸ் மொபெட்களின் விற்பனையிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. தற்சமயம் நடைபெற்றுவரும் 2021-22 நிதியாண்டின் கடந்த இராண்டாம் கால்பகுதியில் மொக்தம் 8.70 லட்ச வாகனங்களை உலகளவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

ஆனால் 2020-21 நிதியாண்டில் 4 சதவீதம் குறைவாக 8.34 லட்ச டிவிஎஸ் வாகனங்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 8.34 லட்சம் என்பது 2020-21 நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். அதிலும் குறிப்பாக டிவிஎஸ்-இன் 3-சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்ச டிவிஎஸ் வாகனங்கள் விற்பனை!! 2021 ஆகஸ்டை காட்டிலும் 50 ஆயிரம் யூனிட் அதிகம்

கடந்த நிதியாண்டில் இதே இரண்டாம் கால்பகுதியில் மொத்தம் 33 ஆயிரம் டிவிஎஸ் 3-வீலர்ஸ் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 47 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து சமீபத்தில் புதிய டிவிஎஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மெருக்கேற்றப்பட்ட ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரின் விலைகள் ரூ.73,400 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company registers a sales growth of 6% in September 2021.
Story first published: Sunday, October 10, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X