ஒரு முறை சார்ஜ் பண்ணா 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

பெங்களூருவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அட்டகாசமான இ-மிதிவண்டியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

பேட்டரியின் படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் டூட்சே (Toutche) நிறுவனம் அதிக சூப்பர் திறன் கொண்ட இ-மிதிவண்டி ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஹெய்லியோ எச்100 எனும் பெயரில் அந்த இ-சைக்கிள் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

இது ஓர் புதிய தலைமுறை எலெக்ட்ரிக் இ-சைக்கிளாகும். இந்த சைக்கிளுக்கு நிறுவனம் ரூ. 48,900 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. எக்கசக்க சிறப்பு வசதிகளை இவ்வாகனம் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

இ-சைக்கிளின் அறிமுகத்தைத் தொடர்ந்து விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் தளம் வாயிலாக ஹெய்லியோ எச்100 இ-சைக்கிள்களுக்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஏற்கனவே மூன்று விதமான இ-சைக்கிள்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

ஹெய்லியோ எம்100, ஹெய்லியோ எம்200 மற்றும் ஹெய்லியோ எச்200 ஆகியவற்றை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. இதன் வரிசையிலேயே புதியதாக ஹெய்லியோ எச்100 இ-மிதிவண்டியையும் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதற்கான புக்கிங்கே இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ளது.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

புக்கிங் பணிகள் நேற்றே தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்போர்ட்ஸ் மிதிவண்டிகளுக்கு இணையான தோற்றம், இரு விதமான நிற தேர்வு (ஸ்பிரிங் பச்சை மற்றும் ஃபெடா வெள்ளை), பிரீமியம் அம்சங்கள் என எக்கசக்க சிறப்புகளுடன் ஹெய்லியோ எச்100 இ-மிதிவண் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

இளைஞர்களையும், தினசரி பயன்பாட்டாளர்களையும் குறி வைத்து இந்த இ-சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. டூட்சே நிறுவனம் இ-சைக்கிள்களை கட்டமைக்க 6061 அலுமினிய உலோகத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஆகையால், இது மிக இலகு ரக எடைக் கொண்ட வாகனமாக மாறியிருக்கின்றது. சந்தையிலேயே மிக குறைவான எடைக் கொண்ட இ-சைக்கிளும் இதுவேவாகும்.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

தொடர்ந்து, இன்டெலிஜன்ட் கன்ட்ரோல்லர், கழட்டி மாட்டக் கூடிய பேனசோனிக் லித்தியம்-அயன் பேட்டரி, 250 வாட் திறனுடைய பிஎல்டி மோட்டார், உள்ளிட்டவை இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 60கிமீ முதல் 80 கிமீ தூரம் வரை செல்லும்.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

7 ஸ்பீடு ஷிமனோ வேகக்கட்டுப்பாட்டு கருவி, பெடல் அசிஸ்ட் வசதி உள்ளிட்டவையும் இ-சைக்கிள்களில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், ஹெய்லியோ எச்100 மாடல் ஹைபிரிட் இ-பைக்குகள் சர்வதேச தரத்தில் காட்சியளிக்கின்றது.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

டூட்சே நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை மைசூரில் வைத்து இயக்கி வருகின்றது. இங்கே ஹெய்லியோ ரக இ-மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நிறுவனம், பேட்டரி, மின் மோட்டார் மற்றும் கன்ட்ரோல்லர் உள்ளிட்டவற்றிற்கு 18 மாத கால வாரண்டியையும், இ-சைக்கிளின் ஃப்ரேமிற்கு 2 ஆண்டுகள் வாரண்டியையும் வழங்கியிருக்கின்றது.

ஒரு முறை முழுசா சார்ஜ் 80கிமீ பயணிக்கலாம்! பெங்களூரு நிறுவனத்தின் அட்டகாசமான இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

பேட்டரியின் படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.

நிறுவனம் தற்போது நாட்டின் 18 முக்கிய நகரங்களில் தனது விற்பனை சேவையை செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இ-சைக்கிளின் அறிமுகம்குறித்து நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் ரகு கெரகட்டி கூறியதாவது, "புதிய எச்100 இ பைக் சிறந்த ஸ்டைல் மற்றும் திறனைக் கொண்டது. இதை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

Most Read Articles
English summary
Toutche Launched ‘Heileo H100’ Hybrid Electric Bike In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X