2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

பட்ஜெட் காரை விட மிக மிக அதிக விலையில் ஓர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் விலை எவ்வளவு, என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

பிரபல பிரீமியம் தர இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான Triumph (டிரையம்ப்) அதன் 2021 Speed Twin (2021 ஸ்பீடு ட்வின்) இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் மாடர்ன் கால கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

இந்த பைக் மிக மிக அதிகபட்ச விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 10.99 லட்சம் என்ற விலையில் இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மலிவு விலை கார்களான ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களைக் காட்டிலும் பல மடங்கு உயர்வான விலை இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய இரண்டு கார்களும் ரூ. 5.50 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஆரம்ப நிலை மாடலின் விலை மட்டுமே ஆகும். ஆனால், இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலைக் கொண்டதாக 2021 ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக் விற்பனைக்கு வந்திருப்பது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

புதிய 2021 ஸ்பீடு ட்வின் பைக்கில் புதிய பிரேக், புதிய சஸ்பென்ஷன், புதிய டயர்கள் மற்றும் வீல்கள் என பல அம்சங்கள் புதிதாக பயன்படுதப்பட்டிருக்கின்றன. இத்துடன் ஸ்டியரிங்கின் ஜாமெட்ரிக் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டிருக்கின்றன. அரை டிகிரி கூர்மையான ரேக் மற்றும் 2 மிமீ குறைந்த ட்ரெயில் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

இருப்பினும், இதன் ஒட்டுமொத்த தோற்றம் பழமை மாறாமல் இருக்கின்றது. அதாவது, ஸ்பீடு ட்வின் பைக்கிற்கே உரித்தான தோற்றம் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேசமயம், மேலே கூறியதைப் போல சில ஸ்டைல் மாற்றங்கள் போன்ற வேலைகள் மட்டும் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், புதிய கிராஃபிக்குகள் அடங்கிய 14.5 லிட்டர் எரிபொருள் தொட்டி, புதிய முகப்பு மின் விளக்கு மவுண்ட், புதிய சைலென்சர்கள் மற்றும் அப்ஸ்வெப்ட் சைலென்சர்கள் அலுமினியம் அணிகலனுடன் இந்த பைக் அப்டேட் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

இத்துடன் முன் மற்றும் பின் பக்கத்தில் புதிய மட்குவார்டுகள் மற்றும் அலுமினிய பூச்சுக் கொண்ட பேனல் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், 2021 ஸ்பீடு ட்வின் பைக்கில் மிக அதிக திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 1,200 சிசி எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக 3 பிஎச்பி திறனை வெளியேற்றும் திறன் கொண்டது.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

அதாவது புதிய எஞ்ஜின் 99 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. எஞ்ஜினை போலவே இப்பைக்கில் அதிக சிறப்பான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பைக்கின் முன் பக்கத்தில் 43 மிமீ மர்ஸோச்சி ஃபோர்க், கார்ட்ரிட்ஜ் டேம்பிங்குடனும், பின் பக்க வீலில் அட்ஜெஸ்டபிள் ப்ரீலோட் வசதிக் கொண்ட ட்வின் ஷாக் அப்சார்பர்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

இது எந்த மாதிரியான கரடு, முரடான சாலையாக இருந்தாலும் சௌகரியமாக பயணிக்க உதவும். இத்துடன், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ப்ரெம்போ 4 பிஸ்டன் எம்50 ரேடிகள் மோனோப்ளோக் காரிபர்கள் கருவிகள் கொண்ட இரட்டை 320 மிமீ டிஸ்க் மற்றும் பின் பக்க வீலில் நிஸின் இரட்டை பிஸ்டன் காலிவர்கள் கொண்ட 220 மிமீ டிஸ்க் உள்ளிட்டவை இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், மிக சிறந்த பிரேக்கிங்கை பெற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

இவை மட்டுமின்றி இன்னும் பல அம்சங்களும் இந்த விலையுயர்ந்த பைக்கில் ட்ரையம்ப் வழங்கியிருக்கின்றது. மூன்று விதமான ரைடிங் மோட்கள் ஸ்பீடு ட்வின் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. மழை, சாலை மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே வழங்கப்பட்டுள்ளன. இந்த ரைடிங் மோட்கள் ரைடருக்கு மிகவும் அலாதியான பயண அனுபவத்தை வழங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 Triumph Speed Twin பைக் இந்தியாவில் அறிமுகம்... இதோட விலை நம்ம பட்ஜெட் காரைவிட மிக மிக அதிகம்!

தொடர்ந்து, ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டிராக்சன் கன்ட்ரோல், டயர் பிரஸ்ஸர் மாணிட்டர் உள்ளிட்ட இன்னும் பல அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் பீரிமியம் தர கிளாசிக் ரக பைக் என்பதால் மிக நீளமான பட்டியலில் இதில் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 31, 2021, 20:06 [IST]
English summary
Triumph launched 2021 speed twin bike in india at rs 10 99 lakh
மேலும்... #டிரையம்ப் #triumph
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+