2021ஆம் ஆண்டிற்காக உருவாகும் ட்ரையம்ப்பின் புதிய ‘மணற்புயல்’ பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் புதிய வேரியண்ட்டை சாண்ட்ஸ்ட்ரோம் என்ற பெயரில் ட்ரையம்ப் நிறுவனம் இந்த 2021ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த் புதிய ட்ரையம்ப் பைக்கை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டிற்காக உருவாகும் ட்ரையம்ப்பின் புதிய ‘மணற்புயல்’ பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் அதன் ஆரம்ப நிலை மாடர்ன் கிளாசிக் மாடல்களை 2021ஆம் ஆண்டிற்காக அப்கிரேட் செய்ய அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

2021ஆம் ஆண்டிற்காக உருவாகும் ட்ரையம்ப்பின் புதிய ‘மணற்புயல்’ பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

இந்த அப்டேட்களுடன் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு சாண்ட்ஸ்ட்ரோம் (மணற்புயல்) என்ற வேரியண்ட்டையும் புதியதாக வழங்க இந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் இந்த புதிய வேரியண்ட்டின் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்காக உருவாகும் ட்ரையம்ப்பின் புதிய ‘மணற்புயல்’ பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

அதுமட்டுமின்றி ஐரோப்பாவில் தாக்கல் செய்யப்பட்ட வகை-ஒப்புதல் விபரங்களிலும் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் சாண்ட் என இதன் பெயரை ட்ரையம்ப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த 2021ஆம் வருடத்தில் இறுதி சில மாதங்களில் தயாரிப்பு வாகனங்களை 2022 மாடல்களாக அறிமுகப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்காக உருவாகும் ட்ரையம்ப்பின் புதிய ‘மணற்புயல்’ பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

இதன் காரணமாக ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் சாண்ட்ஸ்ட்ரோம் பைக் 2022 மாடலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் புதிய வெர்சன் ஸ்ட்ரீட் ட்வின் கோல்டுலைன் என்ற பெயரில் வெளிவரவுள்ளதையும் உறுதிப்படுத்தி உள்ளன.

2021ஆம் ஆண்டிற்காக உருவாகும் ட்ரையம்ப்பின் புதிய ‘மணற்புயல்’ பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளின் என்ஜின் அமைப்பில் யூரோ 5-க்கு இணக்கமானதாக அப்கிரேட் செய்ய வேண்டி சில திருத்தியமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதையும் இந்த ஆவணங்கள் தெரியப்படுத்துகின்றன.

இருப்பினும் இவற்றின் என்ஜின் வெளிப்படுத்தும் 64.1 பிஎச்பி ஆற்றல் அளவில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் இந்த அதிகப்பட்ச ஆற்றலை என்ஜின் 7,500 ஆர்பிஎம்-க்கு மாற்றாக சற்று விரைவாக 7,250 ஆர்பிஎம்-லேயே வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டிற்காக உருவாகும் ட்ரையம்ப்பின் புதிய ‘மணற்புயல்’ பைக்!! இந்தியா வர வாய்ப்பிருக்கா?

அதேபோல் என்ஜின் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச 80 என்எம் டார்க் திறனில் மாற்றாம் இருக்காது என்றாலும், இந்த டார்க் திறனை என்ஜின் 3,250 ஆர்பிஎம்-க்கு பதிலாக 3,200 ஆர்பிஎம்-லேயே வெளிப்படுத்திவிடும்.

புதிய ஸ்ட்ரீட்ய் ஸ்க்ராம்ப்ளர் சாண்ட்ஸ்ட்ரோம் பைக்கின் எடை 228 கிலோவில் இருக்கும் என்பது தவிர்த்து இந்த புதிய வேரியண்ட்டை எந்த விபரமும் சரியாக தெரிய வரவில்லை. நமக்கு தெரிந்தவரை இந்த பைக்கில் உயரத்தில் முன்பக்க ஃபெண்டர், பெரிய முன் சக்கரம் மற்றும் பெயருக்கு ஏற்றாற்போல் சில கூடுதல் சஸ்பென்ஷன் ட்ராவலை கொண்டிருக்கலாம்.

Most Read Articles

English summary
Triumph Street Scrambler Sandstorm Expected In 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X