2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

2021 Triumph Speed Twin பைக்கின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றியும், இந்த புதிய Triumph மோட்டார்சைக்கிள் பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

Triumph motorcycle நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய Speed Twin பைக்கை வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட புதிய Speed Twin பைக் ஏற்கனவே சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளது.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

இந்த நிலையில் தற்போது இந்த மோட்டார்சைக்கிளின் பெயர் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய இணையத்தள பக்கத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய Speed Twin பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே இந்தியாவில் ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் Triumph-இன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையத்திலோ அப்டேட் செய்யப்பட்ட Speed Twin பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு முன் தொகையாக சில பத்தாயிரங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

Triumph Speed Twin பைக்கை பொறுத்தவரையில், இதில் அப்டேட்கள் தோற்றத்தில் மிக குறைவாகவே வழங்கப்பட்டாலும், என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பு போன்ற முக்கியமான இயந்திர பாகங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை என்பதை மறந்துவிட வேண்டாம்.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

புதிய Speed Twin பைக்கிலும் வழக்கமான 1,200சிசி, இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிஎஸ்6-க்கு இணக்கமான என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது முன்பு 96 பிஎச்பி வழங்கிய இந்த என்ஜின் அப்டேட் செய்யப்பட்ட மாடலில் அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 98.6 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தும்.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

மற்றப்படி அதிகப்பட்ச 112 என்எம் டார்க் திறனில் எந்த மாற்றமும் இல்லை. புதிய Speed Twin பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் தலைக்கீழாக 43மிமீ-இல் Marzocchi ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை தற்போது Cartridge damping-ஐ பெற்றுள்ளன.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

இதே சஸ்பென்ஷன் யூனிட் தான் பின்பக்கத்தில் preload-adjustable இரு-பக்க சுருள்கள் உடன் வழங்கப்படவுள்ளன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க புதிய Speed Twin பைக்கின் முன் சக்கரத்தில் எம்50 காலிபர்களுடன் 320மிமீ இரட்டை டிஸ்க் பொருத்தப்படுகிறது.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

அதேநேரம் பின் சக்கரத்தில் ஜப்பானிய நிறுவனமான நிஸினின் காலிபர் உடன் 220மிமீ-இல் ஒற்றை சுழலி ப்ரேக்கிங் பணியை கவனித்து கொள்கிறது. மழை, சாலை மற்றும் ஸ்போர்ட் என்ற 3 விதமான ரைடிங் மோட்களை பெற்றுவரும் இந்த புதிய Triumph பைக்கில் 12-ஸ்போக் 17 இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

இவற்றுடன் சிறந்த இழுவை மற்றும் கிரிப்னஸிற்க்காக மெட்ஸெலர் ரேஸ்டெக் ஆர்ஆர் டயர்கள் வழங்கப்பட உள்ளன. தோற்றத்தில் பெரியதாக மாற்றம் இருக்காது என கூறப்பட்டாலும், புதிய ஸ்டிக்கர்களில் அலங்கரிப்பை எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டு சந்தைகளில் புதிய Triumph Speed Twin பைக் மூன்று விதமான நிறத்தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

இந்த மூன்று நிறத்தேர்வுகளில் சிவப்பு ஹூப்பர், Matte Storm Grey மற்றும் Jet Black என்பவை அடங்குகின்றன. இவை மூன்று தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் Speed Twin பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

விலையை பொறுத்தவரையில், 2021 Speed Twin மோட்டார்சைக்கிள் அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், நிச்சயம் சற்று அதிகமான விலையில் அறிமுகம் செய்யப்படும். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த புதிய Triumph பைக்கின் ஆரம்ப விலை ரூ.10- 11 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

2021 Triumph Speed Twin பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! ஆரம்ப விலையே ரூ.10 லட்சமா? புக்கிங் நடைபெறுகிறது!

Triumph Motorcycle நிறுவனத்தில் இருந்து கடைசியாக 2021 Bonneville Bobber பைக் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.11.75 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுவந்துள்ள இந்த சூப்பர் பைக்கில் 77 விதமான ஆக்ஸஸரீ தொகுப்புகளை தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 24, 2021, 23:33 [IST]
English summary
Triumph Motorcycles announced 2021 Speed Twin launch date in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+