புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

சில வாரங்களுக்கு முன்பு, ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் ஸ்க்ரம்ப்ளர் 1200 பைக்கின் 2021 வெர்சனை வாடிக்கையாளர்களுக்கு வெளிக்காட்டி இருந்தது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில் தற்போது அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் உடன் 900 ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்கை அதன் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் சாண்ட்ஸ்ட்ரோம் லிமிடெட் எடிசன் உடன் ட்ரையம்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இதில் ஸ்பெஷல் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில், வெறும் 775 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரு ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்களின் இந்திய அறிமுகம் மிக விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

2017ல் இருந்து சில சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக் மாடல் அதன் 2021 வெர்சனிலும் அதன் அடிப்படை தோற்றத்தை அப்படியே தொடர்ந்துள்ளது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இதன் காரணமாக இரட்டை எக்ஸாஸ்ட்-குழாய் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்கள் 2021 ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளிலும் தொடரப்பட்டுள்ளன. அதேபோல் பைக்கின் ஹெட்லைட் & கழுத்து பகுதியில் மற்றும் பயணிகளின் கால்களை எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து பாதுகாக்கும் பகுதியில் அலுமினியம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இவற்றுடன் தனது ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்கை கஸ்டமைஸ்ட் செய்து கொள்ள விரும்புபவர்களுக்காக 120 ஒரிஜினல் ஆக்ஸஸரீகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக் மேட் அயர்ன் ஸ்டோன் உடன் ஜெட் ப்ளாக், அர்பன் க்ரே மற்றும் மேட் காக்கி என மூன்று விதமான நிறங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 900சிசி லிக்யூடு கூல்டு, இன்லைன் இரட்டை என்ஜின் அதிகப்பட்சமாக 65 எச்பி மற்றும் 80 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்களில் இருந்து நிச்சயம் அருமையான சத்தம் வெளிவரும்.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

ப்ரேக்கிற்கு ஒற்றை முன்பக்க டிஸ்க் & ப்ரெம்போ காலிபர் தொடரப்பட்டுள்ளது. இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியை பெற்றுள்ள இந்த 2021 பைக்கில் இம்பொளிசர் & யுஎஸ்பி சாக்கெட்டும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இதன் சக்கரங்களில் மெட்ஸெலர் டூரன்ஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மழை, சாலை & ஆஃப் ரோடு என மூன்று விதமான ட்ரைவிங் மோட்களை கொண்டுள்ள 2021 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்கின் விலை 10,800 யுரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9.79 லட்சமாகும். வெறும் 775 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் சாண்ட்ஸ்ட்ரோம் எடிசன் பிரத்யேகமான மேட் ஸ்டோர் க்ரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

அதுமட்டுமின்றி ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து தனித்து தெரிவதற்காக சற்று உயரத்தில் பொருத்தப்பட்ட முன் மட்கார்ட், என்ஜினை பாதுகாக்கும் வகையில் அதற்கு கீழே அலுமினிய பாதுகாப்பான், ஹெட்லேம்பை பாதுகாக்கும் விதத்தில் க்ரில் உள்ளிட்டவற்றை இந்த ஸ்பெஷல் எடிசன் ட்ரையம்ப் பைக் ஏற்றுள்ளது.

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்குகளுக்கு இந்திய சந்தையை டார்கெட் செய்துள்ள ட்ரையம்ப்!! விரைவில் அறிமுகம்!

இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.10.42 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் 775 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதால் இவ்வளவு லட்சங்களை கொடுத்து வாங்க தயாரானாலும் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவே.

Most Read Articles
English summary
India-bound Triumph Street Scrambler and Scrambler Sandstorm bikes launched. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X