இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

ட்ரையம்ப் ராக்கெட் 3ஆர் மற்றும் ராக்கெட் 3ஜிடி ட்ரிபிள் மோட்டார்சைக்கிள்களின் புதிய ப்ளாக் எடிசன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள யூனிட்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

சில தினங்களுக்கு முன்பு ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் ராக்கெட் 3 பைக்குகளுக்கான லிமிடெட் எடிசனை உலகளவில் அறிமுகப்படுத்தி இருந்தது.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளின் மொத்த 1000 யூனிட்களில் வெறும் 15 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

ராக்கெட் 3ஆர் ப்ளாக் மற்றும் ராக்கெட் 3ஜிடி ட்ரிபிள் ப்ளாக் மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் உள்ள ட்ரையம்ப் டீலர்ஷிப் மையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்று வரும் நிலையில் 15 யூனிட்கள் என்பது உண்மையில் மிகவும் குறைவே ஆகும்.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

இதனால் இந்த ட்ரையம்ப் ஸ்பெஷல் எடிசன் பைக்கை யாராவது வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், உடனே முன்பதிவு செய்வது தான் நல்லது. எப்படியிருந்தாலும், ட்ரையம்ப் ராக்கெட் 3 பைக் மாடல்களின் லிமெடெட் எடிசன்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுவது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்துதான் துவங்கும்.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த ஸ்பெஷல் எடிசன் ட்ரையம்ப் பைக்குகள் என்ஜின், இண்டேக் கவர்கள், எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் ரேடியேட்டர் கௌல் என முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

அதேபோல் ஹெட்லேம்ப்பிற்கு மேற்புறத்தில் வழங்கப்படும் சிறிய அளவிலான கண்ணாடி, ஹேண்டில்பார் கைப்பிடிகள், ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, ப்ரேக் மற்றும் க்ளட்ச் லிவர்கள் உள்பட ஸ்விங்கார்ம் பாதுகாப்பான் கூட கருப்பு நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

மற்றப்படி மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ட்ரையம்ப் ராக்கெட் 3 பைக்குகளில் மிக பெரிய அளவிலான 2,500சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இவ்வளவு பெரிய என்ஜின் உலகளவில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு பைக்கிலும் வழங்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

இந்த என்ஜின் 167 பிஎச்பி மற்றும் 221 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. 4 ரைடிங் மோட்களை வழங்கும் ராக்கெட் 3 பைக்கில் மிகவும் நுண்ணர்வுமிக்க ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இவ்வளவு தானா...!! இந்தியாவிற்கு வெறும் 15 ட்ரையம்ப் ராக்கெட் 3 ப்ளாக் எடிசன் பைக்குகள் தானாம்!!

ராக்கெட் 3-இன் இரு மாடல்களிலும் வெவ்வேறான உயரங்களில் இருக்கைகள் தரையில் இருந்து வழங்கப்படுகின்றன. அதாவது ஆர் மாடலில் தரையில் இருந்து 773மிமீ உயரத்திலும், ஜிடி மாடலில் சற்று குறைவாக 750மிமீ உயரத்திலும் ஓட்டுனர் இருக்கை வடிவமைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Triumph Rocket 3 Black Edition coming to India in just 15 units.
Story first published: Sunday, March 28, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X