அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

2021 ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கின் புதிய டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

2021 ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக் உலகளவில் வருகிற ஜூன் 1ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை தெரிவிக்கும் விதமாகவே தற்போது ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்த டீசர் படங்களை வெளியிட்டுள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

மேலும் இந்த படங்களை பதிவிட்ட ட்ரையம்ப் நிறுவனம், "அதிக செயல்திறன், சிறந்த ஹேண்ட்லிங் மற்றும் ப்ரீமியம் ஸ்டைல் உடன் பைக்கின் பரிமாண அளவுகள் அனைத்தும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

ட்ரையம்பின் இந்த கூற்றின் மூலமாக பைக்கில் எந்தெந்த பகுதிகளில் அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறித்து ஒரு ஐடியா நமக்கு கிடைக்கிறது. வழக்கமான பாணியிலேயே உருவாக்கப்படுவதால் 1,200சிசி இணையான-இரட்டை என்ஜின் 2021 ஸ்பீடு ட்வின் பைக்கிலும் தொடரப்படலாம்.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

ஆனால் என்ஜின் அமைப்பின் உட் பாகங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பிலும் சிறிய அளவிலான அப்கிரேட்கள் கொண்டுவரப்படலாம். ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு 41மிமீ-இல் பருமனான ஃபோர்க்குகள் முன்பக்கத்தில் வழங்கப்படுகின்றன.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

முதல் தலைமுறை ஸ்பீடு ட்வின் பைக் இந்தியாவில் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாடர்ன் கிளாசிக் டிசைனில், ஸ்க்ராம்ப்ளர் தோற்றத்தில் வடிவமைக்கப்படும் இந்த ட்ரையம்ப் பைக் அதன் தோற்றத்தை காட்டிலும் அதன் ஆற்றல்மிக்க செயல்படுதிறனிற்கு தான் பெயர் போனது.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

ஆனால் இந்த 1,200சிசி ஸ்பீடு ட்வின் பைக் இந்திய சந்தையில் வரவேற்பை பெறவில்லை. நமது இந்தியர்கள் சிறிய அளவிலான என்ஜினை கொண்ட பைக்குகளுக்கே முன்னுரிமை அளிப்பர். இதன் காரணமாக இந்த பெரிய என்ஜின் கொண்ட பைக் பிரபலமாகவில்லை.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

ஆனால் சிறிய என்ஜின் கொண்ட ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் பொன்னேவில்லே டி120 பைக்குகள் ட்ரையம்ப் பிராண்டில் இருந்து ஓரளவிற்கு இந்தியாவில் விற்பனையாகி கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது கவனிக்கத்தக்க அளவில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களினால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஸ்பீடு ட்வின் பைக்கும் கவனத்தை பெறும் என ட்ரையம்ப் நம்பிக்கையாக உள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரையில் நிர்ணயிக்கப்படும் பைக்கின் விலை தான் அதன் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 லட்சத்தில் நிர்ண்யிக்கப்படலாம்.

அப்டேட் செய்யப்பட்ட தோற்றத்துடன் ட்ரையம்ப்பின் 2021 ட்வின் ஸ்பீடு!! உலகளவிய அறிமுக தேதி வெளியீடு!

முந்தைய தலைமுறையில் இருந்து இந்த ட்ரையம்ப் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன என்பது இதன் உலகளாவிய அறிமுகத்தின் போது தான் தெரிய வரும். அதுவரையில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைப்பில் இருக்கவும்.

Most Read Articles

English summary
2021 Triumph Speed Twin Teased; Global Launch Details Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X