போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பிடிஓ பைக்குகளுக்கான முதல் தொகுப்பு முன்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும் 'Build to Order (BTO)' என்ற இணைய தளம் மூலமாக இந்த மோட்டார்சைக்கிளை வாடிக்கையாளரே தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளலாம் எனவும் டிவிஎஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

இதற்காக டைனாமிக் & ரேஸ் என்கிற இரு செயல்திறன் தொகுப்புகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இவை இரண்டும் தலா 150 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக அறிமுகத்தின் போது டிவிஎஸ் அறிவித்தது. அப்பாச்சி 310 BTO என அழைக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிளிற்கான முன்பதிவுகளும் கடந்த மாதத்தில் துவங்கியது.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

இந்த நிலையில் தற்போது அப்பாச்சி 310 பிடிஓ மாடல்களுக்கான முதல் தொகுப்பு முன்பதிவுகள் நிறைவு பெற்றுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.2,59,990 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலை உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளில் அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் பல அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

புதியதாக இந்த அப்பாச்சி பைக் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரேஸர் சத்தத்துடன் திருத்தப்பட்ட வடிவிலான எக்ஸாஸ்ட் குழாய், முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றை பெற்று வந்துள்ளது. வழக்கமான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது டிஜிட்டல் ஆவண சேமிப்பிடம், பகல் நேர பயண மீட்டர் மற்றும் அதிவேக இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

டிவிஎஸ் 'பில்டு டு ஆர்டர்' ப்ளாட்ஃபாரத்தின்படி டைனாமிக் & ரேஸ் என்கிற இரு கஸ்டமைஸ்ட் தொகுப்புகள் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினோம் அல்லவா. இதில் டைனாமிக் தொகுப்பு ஆனது முன் & பின்பக்கத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ளது. இதில் தலைக்கீழான முன்பக்க ஃபோர்க் மற்றும் மோனோஷாக் உள்ளிட்டவை அடங்குகின்றன.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

பின்பக்கத்தில் வழங்கப்படும் மோனோஷாக்கை முழுவதுமாக ப்ரீ-லோடு மற்றும் டேம்பிங்கிற்கு அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இவற்றுடன் துருப்பிடித்தலை தவிர்க்கும் ஃபினிஷ் உடன் ஃபைனல் ட்ரைவ் செயின், பிரத்யேகமான ஹேண்டில்பார் & ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவையும் டைனாமிக் தொகுப்பில் அடங்குகின்றன.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

மறுபக்கம் ரேஸ் தொகுப்பின் மூலம் நீளமான ஹேண்டில்பார்களுடன் ஸ்போர்டியரான நிலைப்பாட்டில் மோட்டார்சைக்கிளை பெற முடியும். இந்த க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் 8 டிகிரி கீழ்நோக்கியும், முன்னோக்கி சாய்ந்த நிலையில் பைக்கை ஓட்டுவதற்காக 5 டிகிரி உள்நோக்கியும் வழங்கப்படுகின்றன.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

அதேநேரத்தில் இந்த தொகுப்பில் கொடுக்கப்படுகின்ற நீளமான விண்ட்ஸ்க்ரீன் சிறந்த முறையில் எதிர் காற்றை தடுத்து மோட்டார்சைக்கிளின் காற்று இயக்கவியல் பண்பை மேம்படுத்தும். 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கான இந்த தொகுப்புகளில் டைனாமிக் தொகுப்பின் விலை ரூ.12,000 ஆகவும், ரேஸ் தொகுப்பின் விலை ரூ.5,000 ஆகவும் உள்ளன.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

இவற்றில் அடங்காத, ரேஸ் மஃப்லர் ஆனது நிலையான வசதியாகவே இந்த 2021 மோட்டார்சைக்கிளில் வழங்கப்படுகிறது. இந்த பைக்கை பந்தய களத்திற்கான கிராஃபிக்ஸ் உடனும் பெறலாம். ஆனால் இதற்கு கூடுதலாக ரூ.4,500 செலவு செய்ய வேண்டியிருக்கும். அலாய் சக்கரங்களை சிவப்பு நிறத்தில் பெறுவதற்கு ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

தற்போது தற்காலிகமாக நிறுத்தி கொள்ளப்பட்டுள்ள 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பிடிஓ மோட்டார்சைக்கிள்களுக்கான அடுத்த கட்ட முன்பதிவுகள் மீண்டும் வருகிற அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளன. எனவே முதல் தொகுப்பில் முன்பதிவு செய்ய முடியாமல் போனவர்கள் இன்னும் சில நாட்களுக்கு காத்திருங்கள்.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6-க்கு இணக்கமான 313சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 34 எச்பி மற்றும் 7,700 ஆர்பிஎம்-இல் 27.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் இணைக்கப்படுகிறது.

போட்டி போட்டு கொண்டு 2021 டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கை கஸ்டமைஸ்ட் செய்த இளைஞர்கள்!! முன்பதிவுகள் முடிந்தன

அதிகப்பட்சமாக மணிக்கு 160கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.17 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் நகர்புறம், பந்தய களம், நகரம் மற்றும் மழை என்கிற நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த டிவிஎஸ் பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக உள்ள கேடிஎம் ஆர்சி390 மற்றும் கவாஸாகி நிஞ்சா 300 பைக்குகளில் எந்த ரைடிங் மோட்களும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Apache RR 310 Build To Order (BTO) motorcycle attains 100% bookings for the first month of its launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X