டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் விலை குறைவான புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டின் முக்கிய அம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

இந்தியாவின் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக் மாடல் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு குறைவான தேர்வை அளிக்கும் விதத்தில், புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய வேரியண்ட்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.1.28 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த விலை குறைவான வேரியண்ட்டிலும் கொடுக்கப்படுவது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கில் ரெயின், அர்பன் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்படுகின்றன. அதேபோன்று, அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சஸ்பென்ஷன், பிரேக் மற்றும் க்ளட்ச் லிவர்களும் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கில் 197.7சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.4 பிஎச்பி பவரையும், 17.25 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரைடிங் மோடுகளை பொறுத்து 105 கிமீ வேகம் வரை 127 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதி கொண்ட சஸ்பென்ஷன் உள்ளது. முன்புறத்தில் ஷோவா டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

முன்சக்கரத்தில் 270 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்ட்டுள்ளன. சிங்கிள் சேனல் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் சிறந்த பாதுகாப்பை பெறுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

இந்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட பேஸ் வேரியண்ட் மேட் புளூ என்ற விசேஷ வண்ணத் தேர்விலும் கிடைக்கும். க்ளாஸ் பிளாக் மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company has announced the introduction of additional features on the base variant of its Apache RTR 200 4V motorcycle in the Indian market. The entry-level 'single-channel ABS' variant of the 2021 TVS Apache RTR 200 4V now comes with ride modes, adjustable suspension and levers and is offered with a price tag of Rs 1.28 lakh, ex-showroom (Delhi).
Story first published: Friday, March 5, 2021, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X