ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

எச்.எல்.எக்ஸ் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் 2 மில்லியனை உலகளவில் கடந்துள்ளதாக தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிவிஎஸ் பைக்கா? நம்மூரில் விற்பனையில் இல்லையே என நீங்கள் கேட்கலாம்.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

ஆம், டிவிஎஸ் எச்.எல்.எக்ஸ் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் நாடுகளில் தான் எச்.எல்.எக்ஸ் பைக்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கண்டங்களில் சுமார் 42 நாடுகளில் இந்த டிவிஎஸ் பைக் மாடல் விற்பனையில் உள்ளதாம்.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

இந்த நாடுகளில் கிராமப்புறம் மற்றும் நகர்புறம் என எல்லா பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் எச்.எல்.எக்ஸ் பைக்குகளை தேர்வு செய்வதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிவிஎஸ் எச்.எல்.எக்ஸ் பைக்குகளை இந்த நாடுகளில் கமர்ஷியல் டாக்ஸி மற்றும் டெலிவிரிகளுக்கே பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

இதில் இருந்து இந்த டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களின் தரத்தையும், அவை வழங்கும் மைலேஜையும் அறியலாம். 2013இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் எச்.எல்.எக்ஸ் பைக்கிற்கு ஆரம்பத்தில் சற்று சுமாராக தான் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

இதனால் விற்பனையில் முதல் மில்லியனை எட்ட டிவிஎஸ் நிறுவனத்திற்கு 6 வருடங்கள் ஆனது. ஆனால் அதற்கடுத்த 2வது மில்லியனை தற்போது அடைய வெறும் 2 வருடங்கள் தான் எடுத்துக்கொண்டன. ஆரம்பத்தில் இந்த பைக்கிற்கு டிவிஎஸ் நிறுவனம் எதிர்பார்த்த அதிகப்படியான வரவேற்பு கடந்த 2 வருடங்களில் தான் கிடைத்துள்ளது.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

டிவிஎஸ் மோட்டாரின் இந்த மற்றொரு மைல்கல் குறித்து நிறுவனத்தின் சிஇஓ-வும், இயக்குனருமான கே.என் ராதாகிருஷ்ணன் பேசுகையில், எங்கள் முன்னணி உலகளாவிய பிராண்ட் டிவிஎஸ் எச்.எல்.எக்ஸ் உலக சந்தைகளில் 2 மில்லியன் யூனிட்கள் விற்பனை மைல்கல்லை அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

டிவிஎஸ் எச்.எல்.எக்ஸ் பைக்குகள் எங்கள் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தரத்திற்கு ஒரு சான்று. உலகம் முழுவதும் இந்த பைக்குகளின் ஆயுள், நம்பகத்தன்மை, விரிவான சேவை மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்கும் தன்மையில் நாங்கள் தொடர்ந்து ஒரு அளவுக்கோலை அமைத்து, மிகவும் போற்றப்படும் பிராண்ட்டாக இதனை வைத்திருக்க முயற்சி செய்கிறோம்.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

எப்போதும் வாடிக்கையாளர்களை சார்ந்த ஒரு நிறுவனமாக, வேகமாக அதிகரித்துவரும் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும், தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்கவும் நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த புதிய மைல்கல் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சலுகைகளை அறிமுகப்படுத்த எங்களை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது என்றார்.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

டிவிஎஸ் எச்.எல்.எக்ஸ் பைக்குகளில் எச்.எல்.எக்ஸ் ப்ளஸ் (100சிசி), எச்.எல்.எக்ஸ் 125, எச்.எல்.எக்ஸ் 150 மற்றும் எச்.எல்.எக்ஸ் 150 எக்ஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. நம் நாட்டில் விற்பனையில் உள்ள பஜாஜ் பல்சர் பைக்குகளின் வரிசையை பார்த்தது போல் தோன்றுகிறதா!

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

இந்த எச்.எல்.எக்ஸ் பைக்குகளில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள், தட்டையான இருக்கை அமைப்பு மற்றும் லக்கேஜ் கேரியர் உள்ளிட்டவை முக்கியமான அம்சங்களாக உள்ளன. இதில் எச்.எல்.எக்ஸ் 125 பைக்கில் 124.53சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

அதிகப்பட்சமாக 11 எச்பி மற்றும் 10.8 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இரட்டை-நிலை வடிக்கட்டுதல் இந்த பைக்குகளில் வழங்கப்படும் முக்கியமான தொழிற்நுட்ப அம்சமாகும். இதனுடன் ஏகப்பட்ட இதர தொழிற்நுட்பங்களையும் எச்.எல்.எக்ஸ் பைக்குகளில் டிவிஎஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஆப்பிரிக்காவில் அதிக பேர் வாங்கும் டிவிஎஸ் பைக்!! விற்பனையில் 2 மில்லியனை கடந்தது - நம்மூரில் விற்பனையில் இல்ல

யுஎஸ்பி சார்ஜர்கள், ஹசார்ட் விளக்குகள், கியர் நிலைப்பாட்டை காட்டும் இண்டிகேட்டர் மற்றும் டெலிமேடிக்ஸ் தீர்வு என்பவை இந்த மற்ற தொழிற்நுட்பங்களாகும். இந்த பைக்குகள் அனைத்திலும் இருக்கை நன்கு பெரியதாக இருப்பதை பார்க்கலாம். இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக கடைப்பிடிக்காத நாடுகளுக்கு மிகவும் ஏற்ற பைக்குகள்.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company, a reputed two-wheeler and three-wheeler manufacturer globally, announced that the TVS HLX series crossed the sales milestone of 2 million units globally. In 2019, the TVS HLX series crossed a sales milestone of 1 million globally and doubled the same in 2 years.
Story first published: Friday, October 1, 2021, 1:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X