கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு!

புதிய கார்களின் விலை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து உயர இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் பிரபல இருசக்கர வாகனத்தின் நடவடிக்கையால் டூ-வீலர்களின் விலையும் விரைவில் அதிகரிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

மிக விரைவில் கார் உற்பத்தி நிறுவனங்கள் அதன் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விலை உயர்வைச் செய்ய இருப்பதாக ஏற்கனவே சில நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. மாருதி சுசுகி, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் சிட்ரோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான பணிகளில் ஏற்கனவே களமிறங்கிவிட்டன.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

ஒரு படி மேலே சென்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல கார் மாடல்களில் ஒன்றான சஃபாரி எஸ்யூவி காரின் விலையை ரூ.7 ஆயிரம் வரை உயர்த்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதன் வர்த்தக பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள் சிலவற்றின் விலையையும் 2.5 சதவீதம் வரை உயர்த்தியிருக்கின்றது.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

இதுபோன்று விலை உயர்வு குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தகவல்கள் இந்தியர்கள் மத்தியில் ஏற்கனவே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் அதன் ஜூபிடர் 110 (Jupiter 110) ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி ஆரம்ப புள்ளியை வைத்திருக்கின்றது. மேலும், இந்த விலையுயர்வு நடவடிக்கையை இன்னும் சில நிறுவனங்களும் கையாளலாம் என்ற அச்சம் இந்தியர்கள் மத்தியில் இந்த தகவல் எழுப்பியிருக்கின்றது.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் விலையில் ரூ. 600 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கான துள்ளியமான காரணம் வெளியிடப்படவில்லை. அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் வாகன உற்பத்தி பொருட்களின் விலை உயர்வே ஸ்கூட்டரின் விலை உயர்விற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

டிவிஎஸ் ஜூபிடர் 110 ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவற்றின் புதிய விலை பட்டியலைக் கீழே காணலாம்.

ஷீட் மெட்டல் வீல் (Sheet metal wheel): ரூ. 66,273

ஸ்டாண்டர்டு (Standard): ரூ. 69,298

இசட் எக்ஸ் ட்ரம் பிரேக் (ZX drum brake): ரூ. 72,773

இசட் எக்ஸ் டிஸ்க் பிரேக் ZX disc brake): ரூ. 76,573

கிளாசிக் (Classic): ரூ. 76,543

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

ஜூபிடர் 110 ஸ்கூட்டர், இந்தியாவின் ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா 6ஜி மாடலுக்கு நேரடி போட்டியாளனாக விளங்குகின்றது. போட்டியை மிகக் கடுமையானதாக வழங்கும் பொருட்டு அதிக சிறப்பம்சங்களை இதில் டிவிஎஸ் வழங்கி வருகின்றது. அந்தவகையில், வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வாய் பகுதி, பெரிய கால் வைக்கும் இடம், இருக்கைக்கு அடியில் 21 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

இத்துடன் சில உயர் நிலை தேர்வுகளில் பெட்டியுடன் கூடிய யுஎஸ்பி சார்ஜர் வசதியும் வழங்கப்படுகின்றது. டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் 109.7 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சிவிடி கியர்பாக்ஸில் இயங்கும். இந்த மோட்டார் 7.37 பிஎச்பி பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

ஸ்கூட்டரில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல் முனைகளிலும் ட்ரம் பிரேக் வசதி வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட உயர்நிலை வேரியண்டுகளில் டிஸ்க் பிரேக் வசதியும் வழங்கப்படுகின்றது.

கார்கள் மட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்! இருசக்கர வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கு! இந்தியாவின் பிரபல ஸ்கூட்டரின் விலை உயர்வு!

மிக மிக சமீபத்திலேயே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலில் 125 தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே தற்போது ஜூபிடர் 110 மாடலின் விலையை உயர்த்தியிருக்கின்றது. இந்த விலை உயர்வின் கீழ் எந்தவொரு புதிய அம்சத்தையோ, மாற்றத்தையோ நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Tvs increases jupiter 110 price here is full details
Story first published: Thursday, December 9, 2021, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X