மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஐக்யூப்பின் விற்பனை வெற்றிக்கரமாக 1,000 என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

தற்போதைக்கு பெங்களூர் மற்றும் டெல்லி என்ற இரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2021 மார்ச் மாதத்தில் மட்டும் 355 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க துவங்கியுள்ளதால், ஐக்யூப் இ-ஸ்கூட்டரின் விற்பனையை வேறு சில நகரங்களுக்கும் கொண்டு செல்ல டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று பார்த்தால், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450-க்கு தான் அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பஜாஜ் சேத்தக்கின் விற்பனை மற்றவைகளை காட்டிலும் தொடர்ச்சியாக அதிகமாகவே இருந்து வந்தது.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

ஆனால் சேத்தக்கின் தயாரிப்பு பணிகளில் தடை ஏற்பட, கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சேத்தக் முன்பதிவுகள் மீண்டும் அடுத்த 48 மணிநேரத்தில் நிறுத்தி கொள்ளப்பட்டன.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

இதனால் சேத்தக்கை முன்பதிவு செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்து வர, டிவிஎஸ் ஐக்யூப்பின் விற்பனை கடந்த சில மாதங்களாக நல்லப்படியாக இருந்து வருகிறது. மேலும் இதுதான் ஐக்யூப்பின் விற்பனையை வேகமாக 1,000-ஐ எட்ட வைத்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

ஐக்யூப் ஸ்கூட்டரின் விற்பனையில் தற்சமயம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு ஏத்தர் எனர்ஜி மட்டும் தான் சவாலான போட்டி நிறுவனமாக விளங்குகிறது. ஏத்தர் எனர்ஜி இந்தியாவில் 27 நகரங்களில் வணிகத்தை மேற்கொண்டு வருவதை மறந்துவிடாதீர்கள்.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இதில் பொருத்தப்படும் பேட்டரி முழு சார்ஜில் அதிகப்பட்சமாக ஈக்கோ மோடில் 75கிமீ தூரம் வரையில் ஸ்கூட்டரை இயக்கி செல்லும் திறன் உடையது.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

ஸ்போர்டில் மோடில் அதிகப்பட்சமாக மணிக்கு 78கிமீ வேகத்தில் செல்ல முடியும். 40kmph வேகத்தை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிட முடியும் என்றால் இந்த டிவிஎஸ் தயாரிப்பின் தரம் எந்த அளவிற்கு இருக்கும் என்று பாருங்கள்.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

டிவிஎஸ் ஐக்யூப்பின் பேட்டரியை வீட்டு மின்சாரத்தை உபயோகித்து முழுவதும் சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 6 மணிநேரங்கள் தேவைப்படும். நகர்புற பயன்பாட்டிற்கென தயாரிப்பு நிறுவனத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த இ-ஸ்கூட்டரில் இதற்கு ஏற்ப இணைப்பு தொழிற்நுட்பம், மொபைல் போனை சார்ஜ் செய்ய யுஎஸ்பி துளை மற்றும் பெரிய டிஎஃப்டி திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்தது டிவிஎஸ்!! இ-ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரிக்கிறதா?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இதன் பேட்டரிக்கு 3 வருட/50,000கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது. டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தற்சமயம் டெல்லியில் ரூ.1.08 லட்சமாகவும், பெங்களூரில் ரூ.1.20 லட்சமாகவும் உள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS iQube Electric Scooter Sales Cross 1,000 Units Milestone: Demand For EVs Increase.
Story first published: Friday, April 23, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X