டிவிஎஸ் ஜூபிடர்125 Vs ஹோண்டா ஆக்டிவா125 Vs சுசுகி அக்செஸ்125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125 ஆகிய ஸ்கூட்டர்களின் ஒப்பீட்டு தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

இந்தியாவில் 125 சிசி இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆகையால், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த பிரிவை மையப்படுத்தி தங்களின் தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றன. அந்தவகையில், நேற்றைய தினம் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் அதன் குடும்பத்திற்கான ஸ்கூட்டர் என்றழைக்கப்படும் ஜூபிடர் ஸ்கூட்டரை 125 சிசி திறனில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

வழக்கமான ஜூபிடர் ஸ்கூட்டரைக் காட்டிலும் பல மடங்கு மேம்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமாக இதனை டிவிஎஸ் உருவாக்கியிருக்கின்றது. பல்வே்று மாற்றங்களை இந்த ஸ்கூட்டரில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ஆகையால், புதிய டிவிஎஸ் ஜூபிடர் அதன் போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

இந்திய சந்தையில் பல தரப்பட்ட 125 சிசி ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இருப்பினும், புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125-இன் வருகை ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் சுசுகி அக்செஸ் 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில் களமிறங்கியிருக்கின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

இவை மூன்றையுமே இப்பதிவில் ஒப்பீடு செய்திருக்கின்றோம். இதுகுறித்த முக்கிய தகவல்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். வடிவமைப்பு (Design), அம்சங்கள் & வசதி (Features &Convenience), எஞ்ஜின் (Powertrain) மற்றும் விலை (Price) ஆகியவற்றின்கீழ் இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

வடிவமைப்பு (Design):

சுசுகி அக்செஸ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகிய இரு ஸ்கூட்டர்களிலும் கவர்ச்சியான வடிவமைப்பிற்காக குரோம்பூச்சு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே யுக்தியை டிவிஎஸ் நிறுவனமும் அதன் புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தியிருக்கின்றது. குரோம் பூச்சானது சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் ஹெட்லேம்பை சுற்றிலும், ஹோண்டா ஆக்டிவா 125இல் இன்டிகேட்டர் மின் விளக்குகளுக்கு இடையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் சற்று வித்தியாசமாக சால்வை அணிந்திருப்பதைப் போல வி வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், இரு பக்கவாட்டு பகுதியிலும் குரோம்பூச்சு கொண்ட அணிகலன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஸ்கூட்டருக்கு கூடுதல் பிரீமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

அளவில் சுசுகி அக்செஸ் 125 ஐக் காட்டிலும் சற்று பெரியதாகவும், ஹோண்டா ஆக்டிவா 125க்கு இணையானதாகவும் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 காட்சியளிக்கின்றது. இவையிரண்டிற்கும் உருவளவில் பெரியளவில் வித்தியாசம் தென்படவில்லை. அதேபோல், ஹோண்டா ஆக்டிவா 125இல் காணப்படும் சில அலங்கார யுக்திகள் புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரிலும் தென்படுகின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

அந்தவகையில், கண்ணாடி போன்ற பளபளப்பான கருப்பு நிறம் கொண்ட பேனல் ஹெட்லேம்ப்பிற்கு மேலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில், ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருப்பதைக் காட்டிலும் அதிக பிரீமியம் தர அம்சங்கள் இதில் (ஜூபிடர் 125) இடம் பெற்றிருக்கின்றன.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

அம்சங்கள் மற்றும் வசதிகள்:

எந்த வாகனத்தை நாம் வாங்க இருந்தாலும் இந்த இடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அண்மைக் காலங்களாக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்பதற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்துகின்றன. அதாவது, அதிக தொழில்நுட்பத்தின் வாயிலாக அதிக போட்டியை வழங்கி வருகின்றன.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

அந்தவையில், புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரிலும் சில முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமானதாக கேஸ்சார்ஜட் மோனோஷாக் ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஸ்கூட்டரில் கேஸ் சார்ஜட் மோனோஷாக் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், வாகன பிரியர்களின் கவனத்தை இந்த ஸ்கூட்டர் பெரிதும் கவர்ந்திருக்கின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

இத்துடன், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கன்சோல், எல்இடி ஹெட்லேம்ப், முன் பக்கத்தில் ப்யூவலை நிரப்பும் வாய் பகுதி, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், இரு ட்ரிப் மீட்டர்கள், கடிகாரம், இரு ஹெல்மெட்டை வைத்துக் கொள்ளும் வகையில் ஸ்டோரேஜ், ஒன் க்ளிக் ஸ்டார்ட் என பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

இதில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் சுசுகி அக்செஸ் 125 மற்றும் ஹோண்டா 125 இல் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்விரு ஸ்கூட்டர்களிலும் எரிபொருள் நிரப்பும் பகுதி பின் பக்கத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஜூபிடர் 125இல் முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

அதேநேரேத்தில், எல்இடி ஹெட்லேம்ப், ப்யூவல் இன்ஜெக்சன், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, ட்ரிப் மீட்டர்கள், கடிகாரம், ஒன் க்ளிக் ஸ்டார்ட் ஆகிய அம்சங்கள் மூன்று ஸ்கூட்டர்களிலும் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா ஆக்டிவாவில், சுசுகி அக்செஸ் 125ஐக் காட்டிலும் சில கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

அந்தவகையில், ஸ்டாண்ட் போட்டிருந்தால் எஞ்ஜினை ஆஃப் செய்யும் தொழில்நுட்பம், ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, ரிமோட் லிட் (எரிபொருள் நிரப்பும் வாய்) திறப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் இதன் போட்டியாளர்களைக் காட்டிலும் பெரிய டிஸ்க் பிரேக் (220 மிமீ அளவிலானது), 12 இன்ச் டயர், 33 லிட்டர் ஸ்டோரேஜ் மற்றும் அனைத்தையும் செய்யக் கூடிய சாவி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

எஞ்ஜின்:

சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் 125 சிசி 2 வால்வ் சிங்கிள் சிலிண்டர் எஸ்ஓஎச்சி பிஎஸ்6 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.58 பிஎச்பி பவரை 6,750 ஆர்பிஎம்மிலும், 10 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 8.18 பிஎச்பியையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய 125 சிசி பிஎஸ்6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவையிரண்டுடன் ஒப்பிடுகையில் டிவிஎஸ் ஜூபிடர் 125 சற்றே குறைவான திறனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் 3 வால்வு கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.04 பிஎச்பியையும், 10.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. என்எம் டார்க்கில் ஹோண்டா ஆக்டிவை காட்டிலும் 0.2 அதிகம் ஜூபிடர் 125 வெளியேற்றுக்கின்றது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

விலை:

சுசுகி அக்செஸ் 125 இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 76,017 ஆக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 76,095 ஆகும். ஹோண்டா ஆக்டிவாவும் பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 Vs ஹோண்டா ஆக்டிவா 125 Vs சுசுகி அக்செஸ் 125... இதுல எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்! வாங்க பாக்கலாம்!

மேலே பார்த்த போட்டியாளர்களைப் போலவே புதிய ஜூபிடர் 125 ஸ்கூட்டரும் பன்முக தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 76 ஆயிரம் என்ற விலையிலும், உயர்நிலை வேரியண்ட் ரூ. 84,300 என்ற விலையிலு் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பிலானவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tvs jupiter 125 vs honda activa 125 vs suzuki access 125 comparison details
Story first published: Saturday, October 9, 2021, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X