தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

டிவிஎஸ் (TVS) நிறுவனம் அதன் சூப்பர் ஸ்குவாட் எடிசன் (Super Squad Edition)-இல் புதியதாக இரு தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்பைடர் மேன் மற்றும் தார் ஆகிய தேர்வுகளை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) கம்பெனியும் ஒன்று. இந்நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் மட்டுமின்றி மூன்று சக்கர வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் சற்று டிமாண்ட் அதிகம்.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

இந்நிறுவனம் இருசக்கர வாகன மாடல்களில் சில சிறப்பு பதிப்பு வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் பிராண்டின்கீழ் 'சூப்பர் ஸ்குவாட் எடிசன்' (Super Squad Edition) எனும் பெயரில் சில சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர் மாடல்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இவற்றின் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையையே விரிவாக்கம் செய்யும் பணியில் தற்போது டிவிஎஸ் களமிறங்கியிருக்கின்றது.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

நிறுவனம் சூப்பர் ஸ்குவாட் எடிசனில் இரு புதிய தேர்வுகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்குவாட் எடிசன் என்பது மார்வல் தயாரிப்புகளில் வரும் சூப்பர் ஹீரோக்களை பிரதிபலிக்கக் கூடிய தயாரிப்புகள் ஆகும். அதாவது, சூப்பர் ஹீரோக்களின் உருவம் அந்த இருசக்கர வாகனங்களில் இடம் பெற்றிருக்கும். இந்த மாதிரியான ஓர் சிறப்பு பதிப்பையே நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

புதிதாக ஸ்பைடர் மேன் மற்றும் தார் ஆகிய சூப்பர் ஹீரோக்களின் உருவம் பொதிந்த என்டார்க் 125 (NTorq 125) ஸ்கூட்டரே சூப்பர் ஸ்குவாட் எடிசனில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. புதிய இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 84,850 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

சூப்பர் ஸ்குவாட் எடிசனில் ஏற்கனவே கேப்டைன் அமெரிக்கா, அயர்ன் மேன் மற்றும் பிளாக் பேந்தர் ஆகிய மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இவற்றின் வரிசையில் புதியதாக ஸ்பைடர் மேன் மற்றும் தார் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மார்வல் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து (ஹாலிவுட்) திரைப்படங்களுக்கும் உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

இந்தியாவிலும் மார்வல் திரைப்படங்களுக்கு எக்கசக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களைக் கவரும் நோக்கிலேயே சூப்பர் ஸ்குவாட் எடிசனில் புதிதாக ஸ்பைடர் மேன் மற்றும் தார் பதிப்புகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. டிஸ்னி இந்தியா உடனான கூட்டணியின் அடிப்படையில் இப்பதிப்புகள் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

இவற்றில் ப்ளூடூத் இணைப்பு வசதி ஆர்டி-எஃப்ஐ தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த வசதியைப் பெறும் முதல் ஸ்கூட்டர் இதுவே ஆகும். வழக்கமான டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்ஜினே இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

ஆகையால், இந்த வெளிப்புற தோற்ற மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றுமும் சூப்பர் ஸ்குவாட் எடிசனில் காட்சியளிக்கவில்லை. இது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. என்டார்க் 125, என்டார்க் 125 ரேஸ் எடிசன், என்டார்க் 125 ரேஸ் எக்ஸ்பி மற்றும் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஸ்கூட்டரில் வழக்கமான தேர்வுகளில் பயன்படுத்தப்படும் அம்சங்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை புதிய என்டார்க் 125இல் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல், 124.8 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தார், ஸ்பைடர் மேன் ஸ்டிக்கர்களுடன் TVS NTorq 125 ஸ்கூட்டர் அறிமுகம்... இவ்ளோதான் இதோட விலையா!!

இந்த எஞ்ஜின்அதிகபட்சமாக 9.25 பிஎச்பி பவர் மற்றும் 10.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. புதிய சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஸ்கூட்டருடன் இணைக்கும் வகையில் ஸ்மார்ட் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பினை நாம் வாங்கும் ஸ்கூட்டரின் தீமிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஆப்பில் இடம் பெறும் படங்கள் மற்றும் எழுத்துக்களை ஸ்கூட்டரின் வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்பவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியுமாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 16, 2021, 18:54 [IST]
English summary
Tvs launched spider man thor inspired ntorq 125 in india
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+