சென்னையில் விற்பனைக்கு வந்தது டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர்.. விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!
டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் சென்னையில் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் ஐக்யூப். இந்த வாகனத்தையே அண்மையில் 20க்கும் மேற்பட்ட நகரங்களில் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது புதிய நகரங்களில் ஐக்யூப் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 1,15,218 என்ற விலையில் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் அட்வான்ஸ்ட் எலெக்ட்ரிக் டிரைவ்ட்ரெயின் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில் 4.4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது உச்சபட்சமாக மணிக்கு 78 கிமீ எனம் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இத்துடன் ஒரு முழுமையான சார்ஜில் 75 கிமீ ரேஞ்ஜை தரக்கூடிய பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரங்கள் தேவைப்படும். வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போதே இந்த அதிகபட்ச நேரம் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் ஒரு சில மணி நேரம் போதும் என்கிறது டிவிஎஸ்.

டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில், மொபைல் போனை சார்ஜ் செய்யும் வசதி, யுஎஸ்பி போர்ட் வசதிக் கொண்ட பெரிய டிஎஃப்டி திரை மற்றும் இணைப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்குகின்றது. இவற்றுடன் இன்னும் பல சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட மின்சார இருசக்கர வாகனத்தையே நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏத்தர் மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் டிவிஎஸ் க்யூப் மின்சார ஸ்கூட்டருக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் கடந்த நிதியாண்டில் 808 யூனிட் வரை டிவிஎஸ் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டர் விற்பனையாகியிருக்கின்றன. இது சியாம் (Society of Indian Automobile Manufacturers) அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும்.

முன்னதாக பெங்களூரு மற்றும் டில்லி ஆகிய இரு நகரங்களில் மட்டுமே ஐக்யூப் விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இவ்விரு நகரங்களில் மட்டுமே இந்தளவு ஐக்யூப்பிற்கு கிடைத்தது மிகப்பெரிய விஷயம் என வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








