கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

வெளிநாட்டு சந்தைகளில் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனையில் நம்மூர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் நிறுவனம் 2018ல் இந்தியாவின் முதல் ப்ளூடூத் இணைப்பு பெற்ற ஸ்கூட்டராக அதன் எண்டார்க் மாடலை அறிமுகப்படுத்தியது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

இத்தகைய தொழிற்நுட்ப வசதிகளினால் கடந்த சில வருடங்களாக அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டராக விளங்கும் என்டார்க்-ஐ டிவிஎஸ் நிறுவனம் தெற்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா என மொத்தம் 19 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

இந்தியாவை தவிர்த்து உலகளவில் சேவை மையங்கள் டிவிஎஸ் நிறுவனத்திற்கு 60 நாடுகளில் உள்ளன. இந்த நிலையில் இன்று, "சர்வதேச சந்தைகளில் எங்களது ஸ்மார்ட் ஸ்கூட்டரான டிவிஎஸ் எண்டார்க்125 1 லட்ச விற்பனை மைல்கல்லை அடைந்திருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைக்கிறோம்.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

ஆரம்பத்தில் இருந்தே இந்த ஸ்கூட்டர் உலகளவில் தற்போதைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது" என டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் கேஎன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் சிறப்பம்சம் என்று பார்த்தால், இந்த ஸ்கூட்டரில் ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் & டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவற்றில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன. முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆனது நாவிகேஷன் உதவி, லேப்-டைமர், மொபைல் போனின் பேட்டரியின் அளவை காட்டும் திரை, கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடத்தை கண்டறிய உதவுதல், சர்வீஸ் நினைவூட்டுவான் உள்ளிட்டவற்றை கொண்டதாக உள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

இந்த 125சிசி டிவிஎஸ் ஸ்கூட்டரில் ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் என இரு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் டிஸ்க், ட்ரம் மற்றும் ரேஸ் எடிசன் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் எண்டார்க் 125 ஸ்கூட்டருக்கு பெயிண்ட் தேர்வுகளும் ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மேட் சிவப்பு, மெட்டாலிக் க்ரே, மெட்டாலிக் சிவப்பு, மெட்டாலிக் நீலம் என்பவை அடங்குகின்றன. அவெஞ்சர்ஸ் தோற்றத்தை கொண்ட இதன் ரேஸ் எடிசன்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

இவை ஒவ்வொன்றும் அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரங்களை போல் தோற்றத்தை கொண்டுள்ளன. இதன் காரணமாக எதிர்பார்த்ததை போன்று இவற்றிற்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. எண்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8சிசி, ஏர்-கூல்டு பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது.

கொரோனா பரவலுக்கு மத்தியில், சத்தமே இன்றி மாஸான காரியத்தை செய்துள்ள நம்மூர் டிவிஎஸ்!!

அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9.1 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி-ஐ ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.76,261ல் இருந்து ரூ.87.362 வரையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 18, 2021, 8:30 [IST]
English summary
TVS Motor Company, a reputed two-wheeler and three-wheeler manufacturer globally, today announced that the TVS NTORQ 125, its sporty, Bluetooth connected scooter, has crossed the sales milestone of 1 lakh units in international markets.
மேலும்... #டிவிஎஸ் #tvs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+