சம்பவம் செய்த TVS... Raider 125 வெறித்தனமா இருக்கு... வீடியோவை பாத்தா இந்த பைக்கை உடனே வாங்க ஆசைப்படுவீங்க!
புத்தம் புதிய டிவிஎஸ் ரைடர் 125 பைக் இந்தியாவில் இன்று (செப்டம்பர் 16) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டிசைன் 125 சிசி பைக்குகளை போல் அல்லாமல், 160 சிசி, 180 சிசி செக்மெண்ட்டை பைக்குகளை போல் உள்ளது. இந்த பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்துள்ளோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த பைக் குறித்த தகவல்களையும் கீழே உள்ள வீடியோவில் வழங்கியுள்ளோம்.
டிசைனில் மட்டுமல்லாது, செயல்திறனிலும் இது உண்மையில் 125 சிசி பைக்தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், டிவிஎஸ் ரைடர் அமர்க்களப்படுத்துகிறது. எனவே இந்தியாவில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 125, பஜாஜ் என்எஸ் 125, ஹீரோ க்ளாமர், ஹோண்டா ஷைன் மற்றும் ஹோண்டா எஸ்பி125 உள்ளிட்ட பைக்குகளுக்கு டிவிஎஸ் ரைடர் 125 விற்பனையில் கடும் சவால் அளிக்கவுள்ளது. இந்த புத்தம் புதிய பைக் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








