அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

ஓசூரை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விரைவில் அதன் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் அப்டேட் வெர்சனை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் எந்த மாதிரியான அப்டேட்களை எதிர்பார்க்கலாம் உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

ஓபுதிய ஆர்ஆர்310 பைக்கில், சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை போன்று முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க்குகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதியை டிவிஎஸ் நிறுவனம் கொண்டுவரலாம்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

இது நிச்சயம் தேவைக்கு ஏற்றாற்போல் பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பை மாற்றி கொள்ளும் ரைடர்களுக்கு உதவியாக இருக்கும். இதன் சஸ்பென்ஷன் அமைப்பில் வழங்கப்படும் நெம்புகோல்கள் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டு ஆர்ஆர்310 பைக்கில் பொருத்தப்படலாம் என தகவல் கூறுகின்றன.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

சஸ்பென்ஷனில் மட்டுமில்லாமல் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த டிவிஎஸ் பைக்கின் 313சிசி என்ஜின் அமைப்பிலும் அப்கிரேட் கொண்டுவரப்படலாம். ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு தான்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

தற்சமயம் டிவிஎஸ் ஆர்ஆர்310 பைக்கில் சற்று சாய்வாக பொருத்தப்படும் சிங்கிள்-சிலிண்டர், டிஒஎச்சி என்ஜின் அதிகப்பட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

சமீபத்தில் அப்டேட்களை பெற்ற ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி பைக்குகளின் என்ஜின் ஆற்றல் சிறிது அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் எலக்ட்ரானிக் தொகுப்புகளிலும் ஆர்ஆர்310 பைக் அப்டேட்களை பெற்றுவரலாம்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

குறிப்பாக, இந்த பைக்கில் உள்ள நகர்புறம் மற்றும் மழை மோட்களில் நகர்புற போக்குவரத்திற்கு ஏற்ப குறைவான அளவிலான டார்க் திறனை என்ஜின் வழங்காமல், பயணத்தின் பெரும்பான்மையான நேரங்களில் டாப் கியரில் பைக்கை இயங்க வைக்கிறது.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

இதனால் இதில் அப்டேட் வழங்கப்படலாம். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து டயர்களுக்கும் இந்திய அரசாங்கம் சமீபத்தில் தடை விதித்துள்ளதால், புதிய டயர்கள் இந்த பைக்கில் கொண்டுவரப்படலாம்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

தற்சமயம் ஆர்ஆர்310 பைக்கில் மைக்கேலின் ரோடு 5 டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவை டிவிஎஸ் யூரோக்ரிப் ப்ரோடார்க் எக்ஸ்ட்ரீம் டயர்களாக மாற்றப்படலாம். மெக்லீன் டயர்களை காட்டிலும் டிவிஎஸின் இந்த டயர்கள் மிகவும் மலிவானவை ஆகும்.

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அதிரடியாக அப்டேட்களை கொண்டுவரும் டிவிஎஸ்!! விற்பனைக்கு எப்போது வரும்?

இருப்பினும் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விலை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 வரையில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்சமயம் டிவிஎஸ்-இன் இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.5 லட்சமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS will introduce an updated Apache RR 310 on april 7th.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X