எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் (TVS) நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கென புதிய நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழு விபரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மிக விரைவில் மின் வாகனங்களுக்கான பிரத்யேக நிறுவனத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் மிக சமீபத்தில் சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இ வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை கையகப்படுத்தியது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

இந்த கையகப்படுத்துதல் அரங்கேறிய சில நாட்களே ஆகின்ற நிலையில் இந்த அதிரடி அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. புதிய நிறுவனம் முழுமையாக மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கு இருக்கின்றது. இதற்காக நிறுவனம் சுமார் 500 பொறியாளர்கள் கொண்ட குழுவை ஏற்கனவே தயார் செய்துவிட்டது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

இவர்களே டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிலுக்காக பணி புரிய இருக்கின்றனர். மேலும், நிறுவனம் இப்பணிக்காக ரூ. 500 கோடி நிதியை ஒதுக்கியிருக்கின்றது. இத்துடன், ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி வரையிலான முதலீட்டிற்கு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

இந்த அனைத்து தொகையும் மின் வாகன உற்பத்திக்காக மட்டுமே நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது. அதாவது, புதிதாக தான் தொடங்க இருக்கும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அது பயன்படுத்த உள்ளது. மேலும், டிவிஎஸ் நிறுவனம் இந்த பணியில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

ஆகையால், மிக மிக விரைவில் டிவிஎஸ்-இன் புதிய மின்சார பிராண்ட் அதன் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

ஏற்கனவே நிறுவனம் ஐக்யூ்ப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது ஓர் பிரீமியம் தர மின்சார வாகனம் ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இனி இதுமாதிரியான எலெக்ட்ரிக் வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் நாட்டில் அதிகளவில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

அதேநேரத்தில், டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தைக்காக ஆறு புதுமுக வாகனங்களை ஒதுக்கியிருக்கின்றது. அடுத்த ஆறுமாதங்களில் புதுமுக வாகனங்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன. டிவிஎஸ் கிரியான் மாடலில் இருந்து இதன் அறிமுகம் தொடங்க இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

இதுமட்டுமின்றி நாட்டில் மின் வாகன விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை உருவாக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்காக மிக சமீபத்தில் நிறுவனம் சிஇஎஸ்எல் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

இவர்கள் இருவரும் இணைந்தே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை நாடு முழுவதும் உருவாக்க இருக்கின்றனர். அண்மையில் டாடா பவர் நிறுவனத்துடனும் சார்ஜிங் மையங்களை அதிகப்படுத்தும் நோக்கில் டிவிஎஸ் கூட்டணியைத் தொடங்கியது. இதுமாதிரியான முயற்சியில் வாகன உற்பத்தி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் களமிறங்கியிருக்கின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

டிவிஎஸ் நிறுவனம் மிக சமீபத்திலேயே தனது டிவிஎஸ் ஐக்யூப் மின்சார வாகனத்திற்கான வர்த்தகத்தை தொடங்கியது. பெங்களூரு மற்றும் புனே போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே இதன் வர்த்தகம் நடைபெற்று வந்தநிலையில், விரிவாக்கமாக சென்னை உட்பட சில நகரங்களில் இதன் வர்த்தகம் தொடங்கப்பட்டிருக்கின்றது. ரூ. 1,15,218 என்ற விலையில் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தனி நிறுவனம்... தமிழக நிறுவனத்தின் தரமான மூவ்... இத யாருமே எதிர்பார்க்கல!

டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4 கிலோவாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது உச்சபட்சமாக மணிக்கு 78 கிமீ எனம் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இத்துடன், முழுமையான சார்ஜில் 75 கிமீ ரேஞ்ஜை வழங்கக்கூடிய பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரில், மொபைல் போனை சார்ஜ் செய்யும் வசதி, யுஎஸ்பி போர்ட் வசதிக் கொண்ட பெரிய டிஎஃப்டி திரை மற்றும் இணைப்பு தொழில்நுட்பம் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Tvs will set up new subsidiary dedicated to e mobility
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X