மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

மர வேலை பார்ப்பவர் மர பலகையினாலேயே ஓர் இ-சைக்கிளை உருவாக்கியுள்ளார். இ-மிதிவண்டி குறித்து வெளியாகியிருக்கும் முக்கிய விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

உலகளவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவை காற்று மாசுபாடுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்கிற மிக முக்கியமான காரணத்திற்காகவே உலக நாடுகள் அனைத்தும் தங்களின் மக்களை மின் வாகனங்களை நோக்கி நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓர் மர வேலை பார்ப்பவர் தனக்கான மின்சார மிதிவண்டியை தானே வடிவமைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மரக் பலகைகளைக் கொண்டு அந்த வாகனத்தை அவர் உருவாக்கியிருப்பது மேலும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

மரக் கட்டையால் தனக்கான மின்சார இ-சைக்கிளை உருவாக்கியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மரங்களைக் கொண்டு அழகிய கலைப் பொருட்களை உருவாக்கக் கூடிய ஓர் கலைஞர் ஆவார். கடந்த காலங்களில் சிற்பம் மற்றும் விநோத உருவங்களை மரத்தால் வடிவமைத்து வந்தநிலையில் தற்போது இ-சைக்கிளை அவர் உருவாக்கியிருக்கின்றார்.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

இந்த இ-சைக்கிளுக்கு 'எலெக்ட்ரா ப்ளே' (ElectraPlay) எனும் பெயரை அவர் வைத்திருக்கின்றார். மேலும், இந்த இ-சைக்கிளில் 36V மற்றும் 12.5Ah திறன் கொண்ட பேட்டரியை அவர் பயன்படுத்தியிருக்கிறார். இதுவே மரக்கட்டையால் உருவாக்கப்பட்ட இ-சைக்கிளுக்கு தேவையான மின்சார திறனை வழங்குகிறது.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

இதில் என்ன மாதிரியான திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து, இ-சைக்கிளை ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது பற்றிய தகவலையும் இ-சைக்கிளை உருவாக்கிய கலைஞர் வெளியிடவில்லை.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

இருப்பினும், முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் இ-சைக்கிள் உருவாகியிருப்பது தெளிவாக தெரிகின்றது. இதனை, கஃபே ரேஸர் மற்றும் ஸ்கிராம்ப்ளஸ் மோட்டார்சைக்கிளின் தோற்றத்தில் கலைஞர் வடிவமைத்துள்ளார். ஆகையால், மிகவும் வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் அது (எலெக்ட்ரா ப்ளே) காட்சியளிக்கின்றது.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

பல அடுக்கு மர பலகைகளைக் கொண்டே இ-சைக்கில் கலைஞர் உருவாக்கியிருக்கின்றார். ஆகையால், அதிக உறுதியானதாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், இ-சைக்கிளின் கூடுதல் உறுதித் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இரு பக்கத்தின் இரு முனைகளில் உலோகம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

இது மர பலகை அடுக்கு சரிந்து செல்லவோ அல்லது உருக்குலையவோ அனுமதிக்காது. ஆகையால், பாதுகாப்பான பயணம் உறுதி. இ-சைக்கிளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். இதற்கான ஒற்றை துண்டு இருக்கையே இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இருக்கையையும் இ-சைக்கிளை வடிவமைத்த கலைஞரே தன் கை வண்ணத்தில் உருவாக்கியிருக்கின்றார்.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

ஓர் பைப்பை துண்டாக வெட்டியெடுத்து, அதில் மிருதுவான பஞ்சுகளை சேர்த்து ஃபாக்ஸ் லெதரைக் கொண்டு தைத்திருக்கின்றார். இது பயணத்தின்போது மிகவும் அலாதியான அனுபவத்தை வழங்க உதவும். இந்த அம்சங்களால் இ-சைக்கில் ஓர் பிரீமியம் தர வாகனமாக மாறியிருக்கின்றது.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

இத்தகைய வாகனத்தை உருவாக்கியவர் ஓர் பெண் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, இளம் பெண்ணின் கை வண்ணத்திலேயே நாம் பார்த்த மரத்தினாலான இ-சைக்கிள் கவர்ச்சியான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவரின் பெயர் எவி பீ (Evie Bee) என கூறப்படுகின்றது. இந்த இ-சைக்கிள் தனது கனவு வாகனம் என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

மர வேலை பார்ப்பவர் உருவாக்கிய இ-சைக்கிள்... மர பலகையினாலயே வடிவமைச்சிருக்காங்க... வேற லெவல் ஸ்டைல்ல இருக்கு!

அது எவ்வாறு சாலையில் இயங்கும் என்பதை ஓர் ட்ரெய்லர் வீடியோவாக தனது யுட்யூப் சேனலில் அவர் வெளியிட்டிருக்கின்றார். இ-சைக்கிளில் மற்றுமொரு சிறப்பு வசதியாக பெடல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், இ-சைக்கிளை வழக்கமான மிதிவண்டிபோல் பெடல் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இ-சைக்கிளை எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றிய தகவலை தனது வலை தளப்பக்கத்தில் இளம் பெண் கலைஞர் வெளியிட்டிருக்கின்றார். அது இரு இ-புத்தகங்களாக இலவசமாகக் கிடைக்கின்றன. தொடர்ந்து, இந்த இ-சைக்கிளை விற்பனை வழங்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். தற்போது இதற்கான நிதியை திரட்டும் செயலில் அவர் களமிறங்கியுள்ளார்.

Most Read Articles

English summary
Uk based wood working artist builds wooden electric bicycle
Story first published: Tuesday, August 10, 2021, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X