ஆஹா..! ஆக்டிவா ஸ்கூட்டரை இப்படியும் பயன்படுத்தலாமா? இளம்பெண் செயலை பார்த்து மெய்மறந்துபோன கிராம மக்கள்!

இளம்பெண் ஒருவர் ஆக்டிவா ஸ்கூட்டரைக் கொண்டு தரமான சேவையை ஒன்று தனது கிராம மக்களுக்காக செய்து வருகின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

நாட்டின் எந்த பக்கம் பார்த்தாலும் மரண ஓலங்கள் ஒலித்த வண்ணமே இருக்கின்றது. முதல் அலை பரவலைக் காட்டிலும் இரண்டாம் அலை பரவல் மிக தீவிரமாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நிலை நாட்டில் நீடித்து வருகின்றது. தற்போது வைரஸ் பரவல் வேகம் குறைந்திருந்தாலும், மரணங்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

இந்த மாதிரியான சூழ்நிலையில் அரசுகளுக்கு உதவும் விதமாக தொண்டு நிறுவனங்கள், முக்கிய பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் நாட்டின் சாதாரண குடிமக்கள் என பலர் தங்களின் உதவிகளை மிக தாரளமாக வழங்க தொடங்கியிருக்கின்றார்.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

இந்நிலையில், சிலிண்டர் மகள் எனும் இளம்பெண் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இவர், ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் மக்களுக்கு ஓடோடி சென்று உதவி வருகின்றார். இதன்காரணத்தினாலேயே அவரை சிலிண்டர் மகள் என அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அர்ஷி. இவரையே உபி மக்கள் சிலிண்டர் மகள் என அழைக்கின்றனர். இவரின் அப்பா கடந்த சில தினங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பிற்கு ஆளாகியிருக்கின்றார்.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

ஆகையால், இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றார் அர்ஷி. ஆனால், படுக்கை வசதிக் குறைவின் காரணமாக இவரை மருத்துவமனை நிர்வாகம், வீட்டில் தனிமைப்படுத்துமாறு அறிவுருத்தியதாகக் கூறப்படுகின்றது. வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வந்த அந்த வேலையில் ஆக்சிஜன் தேவைப்பட்டது.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

பல இடங்களில் முயற்சி செய்தும் ஆக்சிஜன் கிடைக்கவில்லை. அப்போதுதான் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் தொண்டு நிறுவனம் அர்ஷியின் தந்தைக்கு ஆக்சிஜன் சிலிண்டரை வழங்கி உதவி கரம் நீட்டியது. இதனால், சில நாட்களிலேயே பெரும் தொற்றில் இருந்து அர்ஷியின் தந்தை மீண்டார்.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

இந்த மாதிரியான சூழ்நிலையில் பல ஏழை மக்கள் தன் பகுதியில் வசதித்து வருவதை உணர்ந்த அர்ஷி, அவர்களுக்கு உதவும் வகையிலேயே ஆக்சிஜன் டெலிவரி செய்யும் சேவையில் களமிறங்கியிருக்கின்றார். இச்சேவையை அவர் முழுக்க முழுக்க இலவசமாக செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

தன்னுடைய தந்தையின் உயிரை காப்பாற்ற உதவிய உத்தரகாண்ட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அர்ஷி செயல்பட தொடங்கியிருக்கின்றார். இவர்களிடம் இருந்தே அர்ஷி ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பெற்று ஏழை, எளிய மக்களுக்கு உதவி வருகின்றார். இதற்காக அவர் எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

ஆக்சிஜன் சிலிண்டர்களை டெலிவிரி செய்ய தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரையே அர்ஷி பயன்படுத்தி வருகின்றார். இந்த ஸ்கூட்டர் நல்ல மைலேஜை வழங்குவதனால் தான் இதுவரை எந்தவொரு இடையூறையும் சந்திக்கவில்லை என அவர் கூறியிருக்கின்றார்.

ஆக்சிஜன் தேவையா?.. வீட்டுக்கே வந்து தரும் இளம்பெண்... ஒரு பைசாகூட இல்ல...

அதுமட்டுமின்றி, முன் பக்கத்தில் நல்ல இடைவெளி இருப்பதால் ஒரே நேரத்தில் இரு சிலிண்டர்களையும்கூட தன்னால் எடுத்து செல்ல முடிவதாக அவர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இதுவரை 45 சிலிண்டர்களை இலவசமாக தந்திருக்கின்றார், அர்ஷி. மேலும், 18 முறை ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பியும் அவர் வழங்கியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
UP Girl Delivering Oxygen Cylinder On Her Honda Activa. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X