Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

Vespa நிறுவனத்தின் 75th Anniversary Edition சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இவைகுறித்த முக்கிய விபரங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

இத்தாலியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் Vespa. இந்நிறுவனம் Piaggio நிறுவனத்திந் மற்றுமொரு அங்கம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், Vespa நிறுவனம் 75th Anniversary Edition எனும் சிறப்பு பதிப்பு ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

Vespa தனது இருசக்கர வாகன வர்தகத்தை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையிலேயே 75th Anniversary Edition ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. 1946ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Vespa நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டது.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

பிரத்யேக டிசன் மற்றும் கவர்ச்சியான உருவம் என இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தனித்து நிற்கின்றன. ஆகையால், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என உலகளவில் தனித்துவமான வரவேற்பு நிலவுகின்றது. இதன் விளைவாக நிறுவனம் 75 ஆண்டுகள் இருசக்கர வாகன விற்பனையில் வீர நடை போட்டு வருகின்றது.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

தங்கள் நிறுவனத்தின் இந்த நிலையை வெளிக்கொணரும் வகையிலேயே Vespa 75th Anniversary Edition சிறப்பு பதிப்பு ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 1,25,966 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 125 சிசி வேரியண்டில் விற்பனைக்குக் கிடைக்கும் சிறப்பு பதிப்பு Vespa 75th Anniversary Edition ஸ்கூட்டரின் விலையாகும்.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

இதே ஸ்கூட்டர் 150 சிசி வேரியண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அதன் விலை ரூ. 1,39,090 ஆகும். இவையிரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆம், Vespa நிறுவனம் 75th Anniversary Edition ஸ்கூட்டரை இந்திய இருசக்கர வாகன சந்தையில் 125 சிசி மற்றும் 150 சிசி என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

125 சிசி Vespa 75th Anniversary Edition ஸ்கூட்டரின் திறன் வெளிப்பாடு; இது ஓர் ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்ஜினாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 9.92 பிஎஸ் பவரையும், 9.60 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோன்று 150 சிசி திறனில் வந்திருக்கும் Vespa 75th Anniversary Edition ஸ்கூட்டரானது 10.47 பிஎஸ் திறனையும், 10.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைப் பெற்றிருக்கின்றது.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

இது ஓர் ஏர் கூல்டு, ஒற்றை பானை ரக மோட்டாராகும். எனவேதான் இதன் திறன் வெளிப்பாடு சற்று அதிகமாகக் காணப்படுகின்றது. Vespa நிறுவனம் தனது எல்எக்ஸ் 125 மற்றும் விஎக்ஸ்எல் 150 ஸ்கூட்டர்களிலேயே சில மாற்றங்களைச் செய்து 75th Anniversary Edition ஸ்கூட்டராக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

டைமண்ட் கட் அலாய் வீல், லெதர் இருக்கை, குரோம் பூச்சுக் கொண்ட கண்ணாடிகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பின்பக்கத்தில் லக்கேஜை ஏற்றி செல்ல உதவும் ரேக் மற்றும் பிரத்யேக தோற்றம் கொண்ட எக்சாஸ்ட் பல்வேறு சிறப்பு வசிகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Vespa-வின் சிறப்பு எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... இதோட விலை ரூ. 1.25 லட்சம் மட்டுமே!

இத்துடன், எல்இடி ஹெட்லைட், முன் பக்க வீலில் டிஸ்க் மற்றும் ஒற்றை சேனல் ஏபிஎஸ் (150 சிசி வேரியண்டில் மட்டும்) உள்ளிட்ட அம்சங்களையும் Vespa வழங்கியிருக்கின்றது. தற்போது இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. ரூ. 5 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 19, 2021, 19:15 [IST]
English summary
Vespa 75th anniversary edition launched in india at rs 1 25 lakh
மேலும்... #பியாஜியோ #piaggio
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+