மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

இருசக்கர வாகனங்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

இந்தியாவில் நான்கு சக்கர வாகனங்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. கார்களில் சொகுசாக அமர்ந்து பயணிப்பதை காட்டிலும் இந்திய இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கெத்தாக அமர்ந்து பயணிப்பதையே விரும்புகின்றனர்.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

நம்மில் பலருக்கு காரின் மீதான மோகம் அதிகரித்து காணப்பட்டாலும் ஓர் ஜாலி ரைடு போக வேண்டும் என்றால், இதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் வாகனம் இருசக்கர வாகனமாகவே இருக்கிறது. சாலையில் புகுந்து புகுந்து செல்ல மற்றும் உரிய நேரத்தில் இலக்கை சென்றடைய இருசக்கர வாகனங்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

அதேவேலையில், இருசக்கர வாகனங்களிலேயே அதிக ரேஸ் டிரைவ் செய் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது சட்டப்படி குற்றம் ஆகும். இந்திய நகர சாலைகளின் போக்குவரத்து நெரிசலுக்கு உகந்த வாகனமாக இருசக்கர வாகனங்கள் காட்சியளிக்கின்றன. எனவேதான் இந்தியர்கள் பலர் இருசக்கர வாகனங்கள் மீது அளவு கடந்த மோகம் கொண்டிருக்கின்றனர்.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

இதனைக் கருத்தில் கொண்டு கார்களில் கொண்டு வருவதைப் போலவே இருசக்கர வாகனங்களிலும் டூ-வீலர் உற்பத்தி நிறுவனங்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், சமீப காலமாக இருசக்கர வாகனங்களில் ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் நேவிகேஷன் வசதி என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

இவற்றிற்கு முன்னதாக வழங்கப்பட்ட ஓர் சிறப்பு வாய்ந்த அம்சமாக கில்-சுவிட்ச் (Killswitch) இருக்கின்றது. இந்த ஸ்விட்சை பலர் எஞ்ஜினை ஆஃப் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். ஒற்றை தட்டுதலிலேயே இந்த ஸ்விட்ச் எஞ்ஜினை ஆஃப் செய்துவிடும். ஆகையால், எளிய மற்றும் பாதுகாப்பான பொறிமுறையாக இது செயல்படுகிறது. இதன் வாயிலாக எஞ்ஜினை ஆஃப் செய்வதனால் இருசக்கர வாகனத்திற்கு எந்த சிக்கலும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

ஆனால், இந்த செயலுக்காக மட்டும்தான் கில்-சுவிட்ச் வழங்கப்படுகின்றதா? கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை நோக்கம் என்ன?., ஆம், எஞ்ஜினை ஆஃப் செய்யவே இந்த சுவிட்ச் வழங்கப்பட்டிருக்கின்றது. ரைடர்களுக்கு எளிய அணுகுதலை வழங்கும் நோக்கில் இது வழங்கப்பட்டிருக்கின்றது.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், ஓர் இருசக்கர வாகன ஓட்டி மேனுவலாக சாவியை திருகி ஆஃப் செய்வதற்கு பதிலாக கையை நகர்த்தாமலே, கட்டை விரலினாலேயே எஞ்ஜினை இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் வகையில் கில்-சுவிட்ச் வழங்கப்படுகின்றது.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

தொடர்ச்சியாக சாவியை திருகி ஆஃப் செய்வதனால் 'கீ செட்' பிரச்னை ஏற்படலாம். தேய்மானத்தின் காரணமாக விரைவில் கீ செட் செயலற்று, அதனை விரைவில் மாற்ற நேரிடும். இது பெரும் பொருட்செலவை ஏற்படுத்தக் கூடியது. எனவே, இதனைத் தவிர்க்கும் பொருட்டு எளிய முறையில் எஞ்ஜினை ஆஃப் செய்யவே இந்த கில் சுவிட்ச் வழங்கப்பட்டிருக்கின்றது.

மோட்டார்சைக்கிள்களில் கில்-சுவிட்ச் வழங்குவதற்கான உண்மை காரணம் என்ன? அட இத்தன நாளா இது தெரியாம பேச்சே!

ஆனால், இதனை வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது பயன்படுத்தக் கூடாது என வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. இயக்கத்தில் இருக்கும் கில் சுவிட்சை பயன்படுத்துவதானல் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதேவேலையில், சிக்னலில் நிற்குமே, தேவையற்ற நேரங்களில் எஞ்ஜினின் இயக்கத்தை நிறுத்த இதனை எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
Why motorcycle s having kill switch here is real purpose
Story first published: Wednesday, October 20, 2021, 16:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X