கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

தனது கணவருக்காக பெண் ஒருவர் ரூ. 16.4 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

சுசுகி நிறுவனம் அதன் 2021 ஹயபுசா பைக்கை வெகு நாட்களுக்கு பிறகு மிக சமீபத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மீண்டும் விற்பனைக்கு களமிறக்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்பைக் லேட்டாக வந்தாலும் லேட்டாஸ்டான ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களுடன் சிலவற்றுடன் அது விற்பனைக்கு வந்தது.

கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

அதேசமயம், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அப்பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. மிக தெளிவாக கூற வேண்டுமானால் முதல் லாட்டாக 100 யூனிட் 2021 ஹயபுசா பைக்குகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இவையனைத்தும் ஒரு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது லாட்டிலும் 100 யூனிட் ஹயபுசா பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இதுவும், மிக விரைவிலேயே விற்று தீர்ந்தன. 60 நிமிடங்களுக்கும் உள்ளாகவே அனைத்து யூனிட் பைக்குகள் விற்று தீர்ந்ததாக சுசுகி தெரிவித்தது.

கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

மிக எதிர்பார்ப்புடன் காத்திருந்து பலர் பைக்கை புக் செய்திருப்பது தெளிவாக தெரிகின்றது. அந்தவகையில், தனது கணவருக்காக ஓர் பெண் கழுகுபோல் காத்திருந்து சுசுகி ஹயபுசா பைக்கை வாங்கியிருக்கும் சம்பவம் தற்போது இணையத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

தன்னுடைய கணவர் ஓர் மோட்டார் சைக்கிள் வாகன பிரியர் என்பதால், அவருடைய 50 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் நோக்கில் இப்பைக்கை அவர் வாங்கியிருக்கின்றார். மனைவியின் இச்செயல் அவரது கணவருக்கு மறக்க முடியாத ஐம்பதாவது பிறந்த நாளாக அன்றைய தினம் அமைந்துள்ளது.

கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

இந்த நிகழ்வுகுறித்த வீடியோவை டினோஸ் வாலட் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பைக்கை கட்டமைப்பது மற்றும் காத்திருந்து இருசக்கர வாகனத்தை டெலிவரி எடுப்பது உள்ளிட்ட காட்சிகள் அடங்கியுள்ளன. முந்தைய மாடலைக் காட்டிலும் இரண்டு எடைக் குறைவான பைக்காக 2021 ஹயபுசா பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

கணவருக்காக காத்திருந்து 16 லட்ச ரூபா பைக்கை வாங்கிய மனைவி! எதற்காக தெரிஞ்சா மெய்சிலிர்த்து போவீங்க!

இதன் விலை ரூ. 16.4 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலைக் கொண்ட பைக்கையே தனது கணவனுக்கு மனைவி பரிசாகக் கொடுத்திருக்கின்றார். 2021 சுசுகி ஹயபுசா பைக்கில் புதிய அம்சமாக ப்ரெம்போ ஸ்டைல்மா காலிபர் பைக்கின் முன் வீலில் பொருத்தப்பட்டுள்ளது.

Image Courtesy: Dino's Vault

சிறிந்த பிரேக்கிங் வசதிக்காக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பைக்கில் 1,340 சிசி 4 சிலிண்டர், எஞ்ஜிந் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது முந்தைய ஹயபுசாவைக் காட்டிலும் 7 பிஎஸ் குறைவான திறனாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Wife Gifted 2021 Suzuki Hayabusa Superbike To His Husband: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Thursday, July 15, 2021, 13:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X