ராயல் என்பீல்டு இடத்தை காலி செய்ய வருகிறது யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக்... அறிமுக தேதி கசிந்தது...
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்டைலில் உருவாகியிருக்கும் யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக் வரும் 18ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யமஹா நிறுவனம் இந்தியாவில் புதுமுக இருசக்கர வாகனங்களை களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதற்காக நிறுவனம் எஃப்இசட்-எக்ஸ் மாடலை தயார்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Source: Bikewale
இந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் மிக சமீபத்தில் யமஹா நிறுவனத்தின் புதுமுக பைக்கொன்று மறைப்புகளுடன் சாலையில் உலா வந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. பின்னாளில், அது எஃப்இசட்-எக்ஸ் பைக் என உறுதி செய்யப்பட்டது. இப்பைக்கைகுறித்த புகைப்படங்களே மீண்டும் வெளியாகி இணையத்தை கிரங்கடிக்க செய்தது.

விளம்பரத்திற்கு ஷீட்டிங் எடுத்தபோது பகிரப்பட்ட புகைப்படங்களே அவை. இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய யமஹா எஃப்இசட்-எக்ஸ் பைக் எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய தகவல் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. புதிய பைக் வரும் ஜூன் 18ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மிகவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் எஃப்இசட்-எக்ஸ் பைக் யமஹாவின் ரெட்ரோ-ஸ்டைல் எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கின் உருவ அமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகவே, இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமின்றி ஜாவா, பெனெல்லி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் போட்டியளிக்கும் வகையில் யமஹா எஃப்இசட்-எக்ஸ் இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது.

வட்ட வடிவிலான எல்இடி முகப்பு மின் விளக்கு, அலுமினியத்தாலானா பிராக்கெட்டுகள், ஒற்றை துண்டு அமைப்புடைய ஹேண்டில்பார், சிறிய ரேடியேட்டர் குவார்ட் மற்றும் பாக்ஸி ஃப்யூவல் டேங்க் ஆகிய தனித்துவமான உடற் கூறுகளை யமஹா எஃப்இசட்-எக்ஸ் பெற்றிருக்கின்றது.

கடந்த காலங்களில் கேமிராவின் கண்களில் சிக்கியபோது இப்பைக் ஆரஞ்சு, நீலம் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் சிக்கியிருந்தது. ஆகையால், இந்த நிறத்தேர்வுகளில் எஃப்இசட்-எக்ஸ் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இத்துடன் இன்னும் சில தேர்வுகள் இப்பைக்கில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்ஜினைப் பொருத்தவரை எஃப்இசட்-எக்ஸ் பைக்கில் 149சிசி திறன் கொண்ட ஏல்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே இடம்பெற இருக்கின்றது. இது அதிகபட்சமாக 12.2 பிஎச்பி திறனை வெளியேற்றக் கூடியது. எஃப்இசட் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளில் இதே திறன் கொண்ட எஞ்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஃப்இசட்-எக்ஸ் பைக் ரூ. 1.08 லட்சத்திற்கும் அதிகமான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பிடப்பட்டிருக்கும் விலை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பிரீமியம் தர பைக் என்பதால் இந்த உச்சபட்ச விலையிில் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு: முதல் இரு படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








