விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

தொலைக்காட்சி விளம்பரத்திற்கான படப்பிடிப்பில் யமஹாவின் எஃப்இசட்-எக்ஸ் பைக் மூன்று விதமான நிறங்களில் காட்சி தந்துள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

150சிசி எஃப்.இசட் பைக்குகளின் வரிசையை விரிவுப்படுத்த யமஹா தயாராகி வருவதாக சமீபத்தில் நமது தளத்தில் தெரிவித்திருந்தோம். அதன்படி சில வாரங்களுக்கு முன்பு புதிய யமஹா பைக் ஒன்று இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

முன்னதாக இந்த சோதனை யமஹா பைக் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் எக்ஸ்.எஸ்.ஆர் வரிசை பைக்குகளுள் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதன்பின்னரே இது எஃப்.இசட் வரிசைக்கானது என்பது தெளிவானது.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

இந்த நிலையில் ரெட்ரோ டிசைனை பெற்றிருக்கும் யமஹாவின் இந்த எஃப்.இசட் பைக் நீலம், ஆரஞ்ச் மற்றும் கருப்பு என்ற மூன்று விதமான நிறங்களில் சமீபத்தில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட அடல் சுரங்க சாலைக்கு அருகே ரஷ்லேன் செய்திதளத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

இந்த ஸ்பை படங்களில் பைக் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. இதில் இருந்து இந்த பைக்குகளை வைத்து தொலைக்காட்சி விளம்பரத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதை அறிய முடிகிறது.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

இந்த புதிய யமஹா பைக் தற்போதைக்கு எஃப்.இசட்-எக்ஸ் என்கிற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. மற்ற எஃப்.இசட் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் எஃப்.இசட்-எக்ஸ் பல்வேறு விஷயங்களில் வேறுப்பட்டதாக காணப்படுகிறது.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

சமீபத்தில் இணையத்தில் கசிந்திருந்த விபரங்களின்படி பார்த்தோமேயானல், எஃப்.இசட்-எக்ஸ் எஃப்.இசட் எஃப்.ஐ பைக்கை காட்டிலும் கூடுதலாக 30மிமீ நீளமானது, 5மிமீ அகலமானது, 35மிமீ உயரமானது. இதன் பெட்ரோல் டேங்க் கண்ணீர்த்துளி வடிவில் இருப்பதை பார்க்கலாம்.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்களை சுற்றிலும் அலுமினிய ப்ராக்கெட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்கிற்கு கீழே பூமாராங் வடிவிலான ரேடியேட்டர் க்ரில்லையும் யமஹா எஃப்.இசட் பைக்குகளிலேயே புதியதாக இந்த பைக்கில் காணலாம்.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

இருக்கை தட்டையானதாக வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் கால் வைக்கும் பகுதிகளை வைத்து பார்த்தோமேயானால், இந்த பைக்கில் பயணம் மிகவும் சவுகரியமானதாக இருக்கும். இதனால் குறுகிய நகர்புற பயன்பாட்டிற்கு மட்டுமின்றி நீண்ட தூர பயணங்களுக்கும் யமஹா எஃப்.இசட்-எக்ஸ் ஏற்றதாக இருக்கும்.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

இவற்றுடன் மேல் நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த பைக்கில் பார்க்க முடிகிறது. என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில், எஃப்.இசட் எஃப்.ஐ வி3 பைக்கில் பொருத்தப்படும் அதே 149சிசி காற்று-குளிர்விப்பான் எஸ்ஒஎச்சி என்ஜின் தான் இந்த பைக்கிலும் வழங்கப்படும்.

விற்பனைக்குவர வேகமாக தயாராகி வரும் யமஹா எஃப்-இசட்-எக்ஸ்!! மூன்று நிறங்களில் உருவாகிறது...

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படவுள்ளது. தற்போதைய யமஹா எஃப்.இசட் எஃப்.ஐ பைக்குகளை போன்று புதிய எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.10 லட்சத்திற்குள் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha FZ-X Spied During TVC Shoot Revealing New Features Ahead Of Launch: Pics & Details In Tamil.
Story first published: Thursday, April 29, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X