எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க

எந்த நிறுவனமும் பொங்கலுக்கான சிறப்பு சலுகையை அறிவிக்காத நிலையில் யமஹா நிறுவனம் அதன் பிரத்யேக பொங்கல் பண்டிகை சலுகை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத்தொடர்ந்து பார்க்கலாம்.

எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இந்த பண்டிகை நாளை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யமஹா சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. நிதி (கடன்) மற்றும் ரொக்கம் என இரு விதமான வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கின்ற வகையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!

இதுமட்டுமின்றி எளிய கடன் மற்றும் சுலப மாதத் தவனை உள்ளிட்ட சலுகைகளையும் யமஹா அறிவித்திருக்கின்றது. இந்த சிறப்பு சலுகை ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ரொக்கமாக கொடுத்து யமஹாவின் ஏதேனும் ஓர் தயாரிப்பை வாங்குவோர்க்கு ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள அணிகலன்களை இலவசமாக வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!

இதேபோன்று, யமஹாவின் நிதி திட்டத்தின்கீழ் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் சேமிப்பு சலுகை வழங்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி ரூ. 999 என்ற குறைந்த டவுன்பேமென்ட் மற்றும் 6.9 சதவீத வட்டியில் கடன் என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!

என்னென்ன அணிகலன்களை யமஹா இலவசமாக வழங்க இருக்கின்றது?, இருசக்கர வாகனத்தைப் பாதுகாக்கக் கூடிய இரும்பு குவார்ட் செட், மொபைல் சார்ஜர் வசதி, ஃப்ளோர் மேட், சீட் கவர், எல்இடி ஃப்ளாஷர் உள்ளிட்டவற்றையே சிறப்பு அணிகலன்களாக ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ மற்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ ஸ்கூட்டர்களுக்கு யமஹா வழங்க இருக்கின்றது.

எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!

யமஹா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் தமிழகம் மட்டும் தனியாளாக 23 சதவீத பங்களிப்பை வழங்குகின்றது. எனவேதான் தமிழர்களையும், தமிழர்களின் பண்டிகை நாளான பொங்கலையும் சிறப்பிக்கும் விதமாக இந்த சலுகை பற்றிய தகவலை யமஹா அறிவித்திருக்கின்றது. தொடர் ஆதரவை தமிழக இளைஞர்களிடம் இருந்து பெறும் நோக்கிலேயே இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!

யமஹா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 வரிசையில் ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ, ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ ஆகிய மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்களையும், ஆர்15 வெர்ஷன் 3.0, எம்டி-15 155 சிசி, எஃப்இசட் எஃப்ஐ, எஃப்இசட்எஸ் எஃப்ஐ வெர்ஷன் 3.0, எஃப்இசட் 25 மற்றும் புதிய எஃப்இசட்எஸ் 25 ஆகிய பைக்குகளையும் விற்பனைச் செய்து வருகின்றது.

எந்த நிறுவனமும் அறிவிக்கல... பொங்கலுக்கு சிறப்பு சலுகையை வெளியிட்ட யமஹா... இந்த நல்ல வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க!

மேற்கூறிய அனைத்து மாடல்களுக்கும் தற்போது யமஹா அறிவித்திருக்கும் சிறப்பு சலுகைப் பொருந்தும். ஆகையால், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் தமிழகத்தில் நல்ல விற்பனை வளர்ச்சியையேப் பெறும் என யமஹா நிறுவனம் அபரீதமான நம்பிக்கையில் இருந்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Gears Up For Pongal Festivities With Exciting Benefits On Purchase. Read In Tamil.
Story first published: Thursday, January 7, 2021, 18:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X