ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

ஹோண்டாவை தொடர்ந்து அதிரடி அறிவிப்பை யமஹா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் நூறை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பெட்ரோல் விலையுயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். தங்களின் வருமானத்தில் சரி பாதி எரிபொருளுக்கே செலவாகுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா விரைவில் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் அதிர்ச்சியின் தாக்கமே குறையாத நிலையில், நாட்டின் மற்றுமொரு முன்னணி நிறுவனமான யமஹாவும் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

இன்னும் பேரதிர்ச்சியை இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே, பெட்ரோல் விலையுயர்வு இருசக்கர வாகனத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது இருசக்கர வாகனங்களின் விலை தொடர் உயர்வைப் பெற்று வருவது புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கான சூழ்நிலையையேக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

யமஹா நிறுவனம் அதன் ஒய்இசட்எஃப்-ஆர்15, எம்டி-15 மற்றும் எஃப்இசட் 25 ஆகிய பைக்குகளின் விலையையே உயர்த்த இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதேசமயம், சில யமஹா இருசக்கர வாகன விற்பனையாளர்கள் ஜூலை 1 (இன்று) முதல் புதிய விலையுயர்வு அமலுக்கு வந்துவிட்டதாக தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

ஜார்காண்ட் மாநிலத்தில் மட்டும் ரூ. 2,700 விலையுயர்வையும், நாட்டின் பிற மாநிலங்களில் ரூ. 2,500 வரையிலும் விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ரூ. 1,200 முதல் ரூ. 2,200 வரையிலும், பிற மாநிலங்களில் ரூ. 1,200 தொடங்கி ரூ. 2 ஆயிரம் விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

இதுதவிர, மான்ஸ்டர் எடிசன் எனும் பெயரில் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் சிறப்பு பதிப்பு பைக்குகள் புதிய விலையுயர்வுடன் கூடுதல் இரு நூறு ரூபாய் அதிக விலையில் விற்கப்பட வேண்டும் என யமஹா நிறுவனம் தெரிவித்திருப்பதாக டீலர்கள் கூறியுள்ளனர்.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

அண்மையில், எஃப்இசட் 25 பைக் மாடலில் கிடைத்து வந்த மான்ஸ்டர் எடிசன் பைக் இந்திய சந்தையில் இருந்து விளக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இது சில கூடுதல் ஸ்டிக்கர் அலங்காரத்தைத் தவிர வேறு எந்த சிறப்பையும் பெறவில்லை என கவனித்தகுந்தது.

ஹோண்டா பாணியில் யமஹா! கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனங்கள்!

அதாவது, ஸ்டைலை மாற்றிக் காட்டக் கூடிய சில ஸ்டிக்கர் வேலை மட்டுமே அதில் செய்யப்பட்டிருக்கும். ஆகையால், எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் மான்ஸ்டர் எடிசன் மற்றும் வழக்கமான பாதிப்பு ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Hiked Selected Model Bikes Price In India From Today. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X