பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் இளம் தலைமுறையினரின் பேராதரவில் வெற்றிநடை போட்டுவரும் யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியா உள்பட பல வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள யமஹா ஆர்15 பைக் நம் நாட்டில் தண்டர் க்ரே, ரேசிங் நீலம் மற்றும் டார்க் நைட் என்ற மூன்று விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொரு விதமான எக்ஸ்ஷோரூம் விலைகளை கொண்ட இவை மூன்றின் விலைகளும் தற்போது தலா ரூ.1,200 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வினால் யமஹா ஆர்15 பைக்கின் விலை இனி தண்டர் க்ரே நிறத்தில் ரூ.1,49,100 ஆகும்.

பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

மற்ற இரு நிறங்களில் முறையே ரூ.1,50,200 மற்றும் ரூ.1,51,200 என்ற விலைகளில் இந்த யமஹா பைக்கை வாங்க முடியும். இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்றப்படி பைக்கில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

யமஹாவின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான ஆர்6 மற்றும் ஆர்1-ன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 பைக்கில் ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் முழு எல்இடி தரத்திலும், டிஜிட்டல் கன்சோல் எல்சிடி தரத்திலும் பொருத்தப்படுகின்றன.

பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

இவற்றுடன் வழங்கப்படும் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் பின்பக்க ஃபுட்பெக்ஸ் பைக்கிற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குவது மட்டுமின்றி காற்று இயக்கவியலுக்கு இணக்கமான தோற்றத்தையும் வழங்குகிறது.

பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

இந்த பைக்கில் 155சிசி, லிக்யூடு-கூல்டு என்ஜின் வெவ்வேறான வால்வு செயல் (VVA) தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. எளிய என்ஜின் புதுப்பித்தலிற்கு இந்த தொழிற்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பிரபல ஆர்15 பைக்கின் ஷோரூம் விலையை அதிரடியாக அதிகரித்தது யமஹா!! புதிய விலை எவ்வளவு தெரியுமா?

அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 18.37 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-ல் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உதவி மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் வழங்கப்படுகிறது. 142 கிலோ எடை கொண்ட யமஹா ஆர்15 பைக்கின் பெட்ரோல் டேங்க் 11 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 3, 2021, 8:30 [IST]
English summary
Yamaha increased the price of YZF R15 V3 in India. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+