மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
இந்தியாவில் விற்பனையில் உள்ள பிரபலமான ஆர்15-ஐ போன்றதான ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்தை கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்25 மோட்டார்சைக்கிளை மலேசிய நாட்டில் யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த யமஹா பைக்கை பற்றிய விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக ஒய்இசட்எஃப்-ஆர்25 பைக்கில் புதிய நிற தேர்வுகளை மட்டுமே யமஹா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்த வகையில் புதியதாக இந்த பைக்கிற்கு சியான் மெட்டாலிக் நிறம் வழங்கப்பட்டுள்ளது.

அலாய் சக்கரங்கள் வழக்கம்போல் ஆரஞ்ச் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதே ஆரஞ்ச் நிறத்தை புதிய சியான் மெட்டாலிக் நிறத்தேர்வில் பெட்ரோல் டேங்கிற்கு கீழேயும் பார்க்க முடிகிறது. இந்த புதிய நிறத்தேர்வுடன் வழக்கமான யமஹா நீல நிறத்திலும் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 பைக் விற்பனையை தொடரவுள்ளது.

இதுதவிர்த்து பைக்கில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களில் அப்கிரேட்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. இதனால் அதே இரட்டை-பேட் எல்இடி ஹெட்லைட் அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை புதிய யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்25 பைக்கில் தொடர்ந்துள்ளன.

இவற்றுடன் பின்புறத்தை பார்க்க உதவும் கண்னாடிகள், பருத்த பெட்ரோல் டேங்க், பிளவுப்பட்ட வடிவத்தில் இருக்கைகள், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் எல்இடி டெயில்லைட் போன்றவையும் இந்த யமஹா பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரத்திலும் சிங்கிள் டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்25 பைக்கில் வழக்கமான 249சிசி, இணையான-இரட்டை, லிக்யூடு-கூல்டு என்ஜின்தான் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 12,000 ஆர்பிஎம்-ல் 35 பிஎச்பி மற்றும் 10,000 ஆர்பிஎம்-ல் 22.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மலேசிய நாட்டு சந்தைக்கான 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையினை யமஹா நிறுவனம் தற்போதைக்கு அறிவிக்கவில்லை. இந்திய சந்தையில் 250சிசி-இல் எஃப்இசட்25 என்ற ஒற்றை நாக்டு ரக மோட்டார்சைக்கிள் மட்டுமே யமஹா விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications








