இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

உலகளவில் பிரபலமான யமஹா மோட்டார்சைக்கிள்களுள் ஆர்5-யும் ஒன்று என தாராளமாக சொல்லலாம். கடந்த 2021 செப்டம்பரில் புதிய ஆர்15 வி4, ஆர்15 எம் மற்றும் ஏரோக்ஸ் 155 என்ற மூன்று இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் யமஹா தற்போது நான்காம் தலைமுறை ஆர்15 மற்றும் ஆர்15 எம் பைக்குகளை இந்தோனிஷிய நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இந்தியாவில் இந்த இரு ஆர்15 பைக்குகளின் விலைகள் முறையே ரூ.1.71 லட்சம் மற்றும் ரூ.1.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே இந்தோனிஷியாவில் ஆர்15 வி4 பைக்கின் விலை 38.9 மில்லியன் இந்தோனிஷியன் ரூபாயாகவும், ஆர்15 எம் பைக்கின் விலை 43.5 மில்லியன் இந்தோனிஷியன் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இந்திய ரூபாயில் இவற்றின் மதிப்பு ரூ.2.03 லட்சம் மற்றும் ரூ.2.27 லட்சமாகும். 2022ஆம் ஆண்டிற்கான மாடல்களாக களமிறக்கப்பட்டுள்ள இவற்றிற்கு யமஹாவின் ரேசிங் இரத்த நிறமான வெள்ளை, கருப்பு, ஐகான் நீலம் மற்றும் சில்வர் (ஆர்15 எம்) என்ற நான்கு விதமான பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

தோற்றம் மட்டுமின்றி, இந்திய ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் பைக்குகளில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் தான் இந்த இந்தோனிஷிய மாடல்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து நம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த மலிவான ஆர்15 எஸ் பைக்கை போல் எந்த பைக்கும் இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

அளவில் பெரிய ஆர்7 மிடில்-வெய்ட் சூப்பர்ஸ்போர்ட் பைக்கின் அடிப்படையில் புதிய ஆர்15 வி4 உருவாக்கப்பட்டது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். முந்தைய தலைமுறையை உடன் ஒப்பிடுகையில் முற்றிலும் புதிய முன்பக்கத்தை பெற்று வந்துள்ள ஆர்15 வி4 புதிய பாடி கிராஃபிக்ஸ், பருத்த பெட்ரோல் டேங்க் மற்றும் ரீடிசைனில் எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

அத்துடன் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள நிறத்தேர்வுகளும் யமஹா ஆர்15 மாடலை புதுமையானதாக காட்டுகின்றன. ஆர்15 வி4 உடன் ஒப்பிடுகையில் ஆர்15 எம் கூடுதல் ஸ்போர்டியரானதாக விளங்குகிறது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் யமஹாவின் ஒய்-கனெக்ட் இணைப்பு மற்றும் ப்ளூடூத் இணைப்பை பெற முடிகிறது.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

ஆர்15 வி3 மாடலில் இரட்டை-ஹெட்லைட் அமைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் புதிய ஆர்15 வி4-இல் ஒற்றை ஹெட்லைட் அமைப்பு, இருபக்கங்களிலும் எல்இடி டிஆர்எல்கள் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டயர்களும் அகலமானதாக மாற்றப்பட்டுள்ளன. இத்துடன் நின்றுவிடவில்லை, என்ஜின் கட்-ஆஃப் ஸ்விட்ச்சையும் புதிய ஆர்15 வி4 மற்றும் ஆர்15எம் பைக்குகளுக்கு யமஹா வழங்கியுள்ளது.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இந்திய ஆர்15 பைக்குகளுக்கும், இந்தோனிஷிய ஆர்15 பைக்குகளுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் யமஹா ரேசிங் இரத்த நிறமான வெள்ளை பெயிண்ட் தான். இந்தியாவில் இந்த நிறத்தேர்வு வழங்கப்படுவதில்லை. இந்த பெயிண்ட் தேர்வில் அலாய் சக்கரங்கள் வண்ண நிறங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் ரேசிங் நீலம், டார்க் நைட் மற்றும் மெட்டாலிக் சிவப்பு என்ற நிறத்தேர்வுகள் ஆர்15 வி4 பைக்கிற்கு வழங்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

ஆர்15எம் பைக்கிற்கு மெட்டாலிக் க்ரே மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி என்ற பெயிண்ட் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் யமஹா ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் பைக்குகளில் ஒரே மாதிரியான 155சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 18.6 எச்பி மற்றும் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

யமஹாவின் வெவ்வேறான வால்வு செயல்பாட்டு தொழிற்நுட்பத்துடன் உருவாக்கப்படும் இந்த யமஹா மோட்டார்சைக்கிளில் முன்பக்கத்தில் சஸ்பென்ஷனுக்கு தலைக்கீழான ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் ப்ரேக்குகள் கவனித்து கொள்கின்றன.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இந்தியாவில் யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு கேடிஎம் ஆர்சி200, ஆர்சி125 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. நான்காம் தலைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்களினால் இந்தியாவில் யமஹா ஆர்15 பைக்குகளின் விற்பனை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 10,246 ஆர்15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகவில்லையே!! வெள்ளை நிறத்தில் யமஹா ஆர்15 இந்தோனிஷியாவில் அறிமுகம்!

இந்த எண்ணிக்கை 2020 அக்டோபர் மாதத்தை காட்டிலும் சுமார் 63.70% அதிகமாகும். இதற்கு முந்தைய செப்டம்பரிலும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஆர்15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 2020 செப்டம்பரில் வெறும் 4,696 ஆர்15 பைக்குகளே விற்கப்பட்டு இருந்தன. அறிமுகத்திற்கு பிறகு சில வாரங்களுக்கு முன்பு தான் ஆர்15 மோட்டார்சைக்கிளின் விலையினை யமஹா ரூ.3,000 உயர்த்தி இருந்தது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
2022 Yamaha R15 V4 Launched In Indonesia – New White Colour Option.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X