நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

யமஹாவின் பழம்பெரும் பைக் மாடல்களில் ஒன்றாக விளங்கும் எஸ்ஆர்400 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வந்து 43 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் கொண்டுவரப்படும் ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

யமஹா விற்பனை செய்த பைக்குகளுள் பல பைக் மாடல்கள் இன்றளவும் வாடிக்கையாளர்களின் நினைவில் உள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவில் 80, 90களில் விற்பனையில் இருந்த ஆர்எக்ஸ் வரிசை பைக்குகளை இன்றும் சாலைகளில் பார்க்க முடிகிறது.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

அத்தகைய பாராட்டுகளை பெற்ற பைக் மாடல்களுல் ஒன்று எஸ்ஆர்400. குறிப்பாக யமஹாவின் தாயகமான ஜப்பானில் இதற்கு இப்போதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு 43 வருடங்களானதை தொடர்ந்து இதனை கொண்டாடும் விதத்தில் எஸ்ஆர்400 ஃபனைல் எடிசன் மற்றும் எஸ்ஆர்400 ஃபைனல் எடிசன் லிமிடெட் என்ற இரு ஸ்பெஷல் எடிசன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

இவற்றின் விலைகள் 605,000 ஜப்பானிய யென் (கிட்டத்தட்ட ரூ.4.26 லட்சம்) மற்றும் 748,000 (கிட்டத்தட்ட ரூ.5.27 லட்சம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் லிமிடெட் என்ற வார்த்தையை கொண்ட பைக் பெயருக்கு ஏற்றாற்போல் வெறும் 1000 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

ஜப்பானில் வருகிற மார்ச் 15ஆம் தேதியில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள இந்த யமஹா ஸ்பெஷல் எடிசன் பைக்குகளில் ஃபைனல் எடிசன் நீலம் என்ற ஒற்றை நிறத்திலும், சில்வர்- க்ரே என்ற இரட்டை நிறத்திலும் கிடைக்கவுள்ளது. இரு பைக்கிலும் பிரத்யேகமான ஃபைனல் எடிசன் முத்திரை பக்கவாட்டு பேனல்களில் வழங்கப்பட்டுள்ளது.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

1000 யூனிட்களில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள லிமிடெட் எடிசன் பித்தளையில் 3டி ட்யூனிங் ஃபோர்க் லோகோ மற்றும் 3டி ஃபைனல் எடிசன் முத்திரையுடன் சூரியன் கிட்டத்தட்ட முழுவதும் மறைந்தபின் இருக்கும் வெளிச்சத்தின் நிறத்தில் வெறும் கைகளால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

இவற்றுடன் பித்தளையின் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்போக் ரிம்கள், ப்ரீமியம் தரத்தில் இரட்டை-நிற இருக்கை மற்றும் கருப்பு நிற அனலாக் டயல்களையும் இந்த லிமிடெட் எடிசன் பெற்றுள்ளது. இவை இரண்டிலும் ஒரே 399சிசி சிங்கிள்-சிலிண்டர், எஸ்ஒஎச்சி 2-வால்வு மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-ல் 24 பிஎஸ் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் இந்த பைக்குகள் 29.7kmpl மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

நம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்!!

இந்த மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் இல்லை. ஜப்பானில் ஏபிஎஸ் இல்லாத பைக்குகளை விற்பனை செய்ய 2021 அக்டோபர் மாதம் வரையில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த ஸ்பெஷல் எடிசன் எஸ்ஆர்400 பைக்குகளை மிக விரைவாகவே யமஹா நிறுவனம் அங்கு விற்பனைக்கு கொண்டுவருகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha SR400 Final Edition And Limited
Story first published: Friday, January 22, 2021, 23:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X