டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

Yamaha நிறுவனம் அதன் புதிய தலைமுறை R15 V4.0 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்பைக்கில் இடம் பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விபரங்களைக் கீழே இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

யமஹா (Yamaha) நிறுவனம் அதன் ஒய்இசட்எஃப்-ஆர்15 வி4.0 (YZF-R15 V4.0) பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. விர்ச்சுவல் வெளியீட்டு நிகழ்வை இன்று (செப்டம்பர் 21) யமஹா நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டது. இதன் வாயிலாக ஆர்15 சூப்பர் பைக் அடிப்படையிலான ஏரோக்ஸ் 155 மேக்ஸி ரக ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

இதனைத் தொடர்ந்து, மற்றுமொரு அறிமுகமாக ஒய்இசட்எஃப்-ஆர்15 வி4.0 பைக்கை நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது. இது புதிய தலைமுறை ஆர்15 பைக்காகும். உலகிலேயே இப்பைக் இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. உலக நாடுகள் பலவற்றில் இப்பைக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேலையில் யமஹா நிறுவனம் இந்தியாவிற்கு முக்கியத்துவத்தை இப்பைக்கை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.68 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்பைக்கின் உடல் பேனல் தொடங்கி சேஸிஸ் அமைப்பு வரை பலவற்றை யமஹா நிறுவனம் அப்டேட் செய்திருக்கின்றது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

இதுமட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் குயிக் ஷிஃப்டர் ஆகியவையும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. பொதுவாக இந்த அம்சங்களை உயர் தர மற்றும் பிரீமியம் தர வாகனங்களில் மட்டுமே வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும். ஆனால், யமஹா நிறுவனம் தனது குறைந்த விலை ஸ்போர்ட்ஸ் தர பைக்கான புதிய ஒய்இசட்எஃப் ஆர்15 வி4.0 பைக்கில் வழங்கியிருக்கின்றது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

இது இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து, அப்சைடு டவுண் ஃபோர்க்கும், ப்ளூடூத் இணைப்பு வசதியையும் புதிய தலைமுறை ஆர்15 பைக்கில் யமஹா வழங்கியுள்ளது. ப்ளூடூத் இணைப்பு வசதி புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை வாயிலாக நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

இதனை இணைக்கும் விதமாக பிரத்யேக செல்போன் செயலி ஒன்று வழங்கப்படுகின்றது. இதன் வாயிலாக செல்போனையும், பைக்கையும் இணைத்தால் பல்வேறு முக்கிய தகவல்களை நம்மால் விரல் நுனியிலேயே பெற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து, பைக்கின் வெளிப்புறமும் மிக சிறப்பாக மறு சீரமைக்கப்பட்டிருக்கின்றது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

இதன்படி, புதிய முகப்பு பகுதி பைக்கிற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் கவர்ச்சியான உருவத்தை வழங்கும் வகையில் உள்ளது. இத்துடன், முந்தைய மாடலைக் காட்டிலும் இது சற்று பெரிய உருவம் கொண்ட பைக்காகவும் காட்சியளிக்கின்றது. மேலும், மிக சிறந்த ஏரோடைனமிக்ஸில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

யமஹா நிறுவனம் இப்பைக்கிள் 155 சிசி திறன் கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூடு-கூல்டு, எஸ்ஓஎச்சி, 4 வால்வ் எஞ்ஜினைப் பொருத்தி இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 18.4 பிஎஸ் திறனை 10 ஆயிரம் ஆர்எம்மிலும், 14.2 என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

இந்த எஞ்ஜின் ப்யூவல் இன்ஜெக்டட் மற்றும் வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன் வசதியைக் கொண்டதும்கூட. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இன்றைய ஒரே நாளில் யமஹா நிறுவனம் புதிய தலைமுறை ஆர்15 மற்றும் ஏரோக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

டிராக்சன் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்டர் வசதிகளுடன் புதிய தலைமுறை Yamaha R15 அறிமுகம்... அட விலை இவ்ளோ கம்மியா!!

நிறுவனம் கடந்த சில நாட்களாகவே புதிய தயாரிப்புகளின் வாயிலாக இந்தியர்களை வளைத்து போட்டு வருகின்றது. அந்தவகையில் அண்மையில் ஹைபிரிட் வசதிக் கொண்ட ஃபஸ்ஸினோ 125 மற்றும் ரே இசட்ஆர் 125 ஆகிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. ஆகையால், இன்னும் சில புதுமுக வாகனங்களை யமஹா களமிறக்கினாலும் ஆச்சரியத்திற்கு இடமில்லை. இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெரியளவில் நிலவி வந்த நிலையில் யமஹா நிறுவனம் ஆர்15 வி4.0 பைக்கை உலகிலேயே இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha launched yzf r15 v4 0 bike in india
Story first published: Tuesday, September 21, 2021, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X