ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

Yamaha நிறுவனம் அதன் பிரபல இருசக்கர வாகனமான RayZR மாடலில் Monster Energy Moto GP Edition எனும் புதிய தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா (Yamaha), இன்று அதன் புகழ்மிக்க ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ரேஇசட்ஆர் (RayZR) மாடலில் ஹைபிரிட் தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ரேஇசட்ஆர் 125 எஃப்ஐ மாடலிலேயே ஹைபிரிட் வெர்ஷன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய தேர்வை ரேஇசட்ஆர் ஸ்கூட்டரில் யமஹா நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. Monster Energy Yamaha Moto GP Edition (மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி எடிசன்) எனும் பதிப்பையே நிறுவனம் தற்போது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

புதிய மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி எடிசன் ரேஇசட்ஆர் ஸ்கூட்டருக்கு அறிமுக விலையாக ரூ. 81,330 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஹைபிரிட் வெர்ஷனில் விற்பனைக்கு வந்திருக்கும் ரேஇசட்ஆர் 125 எஃப்ஐ வெர்ஷனைக் காட்டிலும் அதிக விலையாகும். ஆம், ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ரேஇசட்ஆர் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்டிற்கு நிறுவனம் ரூ. 76,830 என்ற விலையை நிர்ணயித்துள்ளது.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

வழக்கமான ரேஇசட்ஆர் ஸ்கூட்டருக்கும் மான்ஸ்டர் எடிசன் வெர்ஷன் ரேஇசட்ஆர் ஸ்கூட்டருக்கும் இடையில் இருக்கும் மாற்றங்கள் என்ன?, புதிய மோட்டோஜிபி உடல் பேனல்களால் மான்ஸ்டர் எடிசன் ரேஇசட்ஆர் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கு இணையான கிராஃபிக்ஸ் மற்றும் கலர் தீம் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றது.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

வேறு எந்த கூடுதல் அலங்காரத்தையும் இது பெறவில்லை. தொடர்ந்து, ஹைபிரிட் ரேஇசட்ஆர் 125 எஃப்ஐ ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போல இதிலும் 125சிசி திறன் கொண்ட ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதிக் கொண்ட ப்யூவல் இன்ஜெக்டட் ப்ளூ கோர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.2 பிஎஸ் மற்றும் 10.3 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் எனப்படும் ஹைபிரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது கூடுதல் பவர் மற்றும் ஆக்சலேரஷன் திறனை வழங்க உதவும். தொடர்ந்து, மிக சிறந்த நிறுத்தத்தை வழங்கவும் உதவும். இத்துடன், தானியங்கி ஸ்டார்ட், ஸ்டாப் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

யமஹா நிறுவனம் ரேஇசட்ஆர் ஸ்கூட்டரின் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வுகளை விரிவாக்கும் செய்யும் வகையில் புதிய தேர்வுகளை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. மிக முக்கிய சிறப்பு வசதிகளின் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு முக்கிய மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை நிறுவனம் இப்புதிய தேர்வுகளில் வழங்கியிருக்கின்றது.

ஹைபிரிட் வெர்ஷன்களை அடுத்து RayZR Monster Energy Moto GP Edition அறிமுகம்... இதோட ஸ்டைல் வேற லெவல்!

மிக விரைவில் நிறுவனம் புதிய ஒய்இசட்எஃப்-ஆர்15 வி3.0 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்திய சந்தையில் இப்பைக் ஆர்15 எம் என்ற பெயரில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அறிமுகம் பற்றிய முக்கிய விபரங்கள் இந்த மாத இறுதிக்குள்ளாகவே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 7, 2021, 17:59 [IST]
English summary
Yamaha launches rayzr monster energy moto gp edition in india at rs 81330
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+