Yamaha MT-15 பைக்கில் புதிய மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன்!! ரூ.1.48 லட்சத்தில் அறிமுகம்!
Yamaha MT-15 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Yamaha MT-15 ஸ்பெஷல் எடிசனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

Yamaha MT-15 பைக்கின் வேரியண்ட்கள் வரிசையில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.48 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கமான MT-15 பைக்கின் விலை ரூ.1,45,600 ஆக உள்ளது.

இந்த வகையில் பார்த்தோமேயானால், Yamaha MT-15 பைக்கின் புதிய மோட்டோஜிபி வெர்சனின் விலை வெறும் ரூ.1,400 மட்டுமே கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டான Yamaha கடந்த மாதத்தில் இதேபோன்று FZ25 பைக்கின் மோட்டோஜிபி வெர்சனை அறிமுகப்படுத்தி இருந்தது.

இந்தியாவின் மலிவான 250சிசி மோட்டார்சைக்கிளான FZ25-இன் இந்த ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.36 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MT-15 மோட்டோஜிப் உடன் ஒப்பிடுகையில் FZ25 மோட்டோஜிபி பைக்கின் இந்த விலை கிட்டத்தட்ட ரூ.22 ஆயிரம் குறைவாகும்.

ஆனால் MT-15 155சிசி நாக்டு மோட்டார்சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது. சரி மீண்டும் MT-15 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசனிற்கு வருவோம். வழக்கமான MT-15 பைக்கில் இருந்து தோற்றத்தில் வேறுப்பட இந்த மோட்டோஜிபி எடிசன் பெட்ரோல் டேங்க் பகுதியில் நக கீறல் போன்ற கிராஃபிக்ஸை கொண்டுள்ளது.

அதேபோல் பெட்ரோல் டேங்கின் மேற்பகுதியில், Yamaha லோகோவிற்கு மேலே ‘Monster' ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், மோட்டோ ஜிபி பிராண்ட் லோகோக்களை பைக்கின் பக்கவாட்டு பேனல்கள், பெட்ரோல் டேங்க் பாதுகாப்பான் உள்ளிட்ட பகுதிகளிலும் காண முடிகிறது.

இவை தவிர்த்து Yamaha MT-15 பைக்கின் தோற்றத்தில் பெரியதாக வேறெந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒற்றை எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் இரட்டை எல்இடி டிஆர்எல்-களை இந்த ஸ்பெஷல் எடிசனும் தொடர்ந்துள்ளது. அதேபோல் என்ஜின் அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை.

2021 Yamaha MT-15 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசனும் வழக்கமான 155சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினுடனே வழங்கப்பட்டுள்ளது. வெவ்வேறான வால்வு செயல்பாட்டு தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் இந்த 155சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.5 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 13.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதனுடன் ஸ்லிப்பர்-உதவி க்ளட்ச் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. தற்போதைக்கு இந்தியாவில் Yamaha MT-15 பைக் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் அமைப்புடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனையும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் ஆக மாற்ற Yamaha தயாராகி வருகிறது.

சஸ்பென்ஷனிற்கு இந்த Yamaha நாக்டு பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோக்ராஸும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க, முன் மற்றும் பின்பக்கத்தில் 282மிமீ மற்றும் 220மிமீ-களில் டிஸ்க்குகள் பொருத்தப்படுகின்றன.

இவற்றுடன் தான் உதவிக்காக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 138 கிலோ எடை கொண்டதாக உள்ள Yamaha MT-15 பைக்கில் டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி டெயில்லேம்ப் & டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்களாக வழங்கப்படுகின்றன.

இந்திய இளம் தலைமுறையினரின் பேவரட் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக விளங்கும் R15 V3-இன் அதே Deltabox Frame-இன் அடிப்படையில் தான் இந்த நாக்டு மோட்டார்சைக்கிளும் தயாரிக்கப்படுகிறது. தற்சமயம் மெட்டாலிக் ப்ளாக், Dark Matt Blue மற்றும் Fluo-Vermillion என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் MT-15 பைக் விற்பனைக்கு கிடைக்கிறது.

இவ்வாறான ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களுக்கு முன்னதாக, புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக சில மாதங்களுக்கு முன்பு FZ-X என்ற ரெட்ரோ-ஸ்டைல் பைக் Yamaha பிராண்டில் இருந்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.1.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. FZ-X பைக்கிற்கும் மூன்று விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








