மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? பர்க்மேன், எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர்குக்கு போட்டி!

போட்டியே இல்லாமல் இருந்தநிலையில் சுசுகி பர்க்மேன் மற்றும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக யமஹா நிறுவனம் அதன் புதுமுக மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் விதமாக சுசுகி நிறுவனம் அதன் பர்க்மேன் ஸ்கூட்டரையும், அப்ரில்லா நிறுவனம் அதன் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரையும் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றன.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

ஆகையால், நாட்டில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை தேடும் இளைஞர்களுக்கு மிக குறைந்தளவு தேர்விலேயே இந்த ரக இருசக்கர வாகனம் கிடைத்து வருகின்றது. எனவே பெரியளவில் போட்டியில்லாமல் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மற்றும் சுசுகி பர்க்மேன் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

இந்தநிலையை மாற்றும் விதமாக, அதாவது, மேக்ஸி ரக வாகன சந்தையில் கூடுதல் தேர்வை வழங்கும் வகையில் புதுமுக மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஒன்று மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

யமஹா நிறுவனமே இந்த திட்டத்தைக் கையிலெடுத்து நிறுவனம் ஆகும். ஆம், இந்திய மேக்ஸி ரக ஸ்கூட்டர் சந்தையில் தனது புதிய தயாரிப்பை களமிறக்க யமஹா நிறுவனமே ஆயத்தமாகி வருகின்றது. அது நேரடியாக பர்க்மேன் ஸ்கூட்டருக்கு போட்டியாக அமைய இருப்பதாகவும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

தற்போது ரூ. 82,700 முதல் ரூ. 86,200 வரையிலான விலையில் சுசுகி பர்க்மேன் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதைக் காட்டிலும் சற்று குறைவான விலையில் அல்லது நிகரான விலையில் யமஹாவின் மேக்ஸி ரக ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

யமஹா நிறுவனம் 125சிசி திறனிலேயே அதன் புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை களமிறக்க உள்ளது. இதற்காக, ஃபஸ்ஸினோ மற்றும் ரே இசட்ஆர் ஆகிய ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 125 சிசி ப்யூவல் இன்ஜெக்டட் திறன் கொண்ட ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

இந்த எஞ்ஜின் 8.2 பிஎச்பி மற்றும் 9.7 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதைவிட சற்று கூடுதல் திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டராக சுசுகி பர்க்மேன் இருக்கின்றது. சுசுகி பர்க்மேன் 8.7 பிஎச்பி மற்றும் 10 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டிருக்கின்றது.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

யமஹா மேக்ஸி ரக ஸ்கூட்டரில் என்ன மாதிரியான அம்சங்கள் எதிர்பார்க்கலாம்?

யமஹா நிறுவனம் ஜப்பான் நாட்டில் என்மேக்ஸ் 125 எனும் பெயரில் ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைச் செய்து வருகின்றது. இதே ஸ்டைல் தாத்பரியங்களுடன் இந்தியாவிற்கான மேக்ஸி ரக ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

அதாவது, இரட்டை பீம் முகப்பு மின் விளக்கு, உயரமான கருப்பு நிற விண்ட்ஷீல்டு, ஹெட்லேம்புடன் சேர்க்கப்பட்ட டிஆர்எல்கள், ஒற்றை துண்டு தோற்றம் கொண்ட சேடில் மற்றும் அலாய் வீல் போன்ற கவர்ச்சியான அம்சங்களுடன் யமஹாவின் மேக்ஸி ரக ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு களமிறக்க தயாராகிறதா யமஹா? சுசுகி பர்க்மேன், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160க்கு போட்டி!

Source: Bikewale

இதுமட்டுமின்றி இன்னும் பல தொழில்நுட்ப வசதிகல், அதாவது, ப்ளூடுத் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு, செல்போன் சார்ஜர் வசதி, பெரிய திரை உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இவைகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை நிறுவனம் சார்பாக வெளியிடப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Planning New Maxi Scooter For India. Read In Tamil.
Story first published: Friday, July 9, 2021, 17:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X