அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா?

யமஹா நிறுவனம் 2021 எஃப்இசட் எஃப்ஐ, எஃப்இசட்எஸ் எஃப்ஐ மாடல் பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2021 எஃப்இசட்எஸ் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ ஆகிய இரு புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விரு பைக்கிலும் புதிய தொழில்நுட்ப வசதியாக யமஹா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் கனெக்ட் எக்ஸ் ப்ளூடூத் இணைப்பு தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

இந்த வசதியின் மூலம் பல்வேறு தகவல்களை செல்போனின் வாயிலாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று பைக் பற்றிய முக்கியமான தகவல்களை செல்போனின் திரை வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான பிரத்யேக செல்போன் செயலியையும் யமஹா கூகுள் ஆப் ஸ்டோரில் வாயிலாக வழங்கி வருகின்றது.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

இந்த செயலியின் வாயிலாக செல்போன் மற்றும் பைக்கை இணைக்கும்போதே பல்வேறு முக்கிய தகவல்கள் மற்றும் சில முக்கிய அம்சங்களைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, இ-லாக், பைக்கின் இருப்பிடத்தைக் கண்டறிதல், ஹசார்ட் உள்ளிட்ட பலவற்றை இயக்கிக் கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வசதிகளையே எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்குகளில் யமஹா வழங்கியுள்ளது.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

விலை:

இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1,03,700 என்ற விலையை யமஹா நிர்ணயித்துள்ளது. இது எஃப்இசட் எஃப்ஐ மாடலின் விலையாகும். எஃப்இசட்எஸ் எஃப்ஐ மாடலின் விலை ரூ. 1,07,200 ஆகும். இவையிரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஆன்-ரோடில் இப்பைக்குகளின் விலை சற்று கூடுதலான மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கும்.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

நிற தேர்வுகள்:

எஃப்இசட் எஃப்ஐ பைக் இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரேசிங் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய நிறங்களே அவை ஆகும். இதனைக் காட்டிலும் பன்முக நிறத்தேர்வில் எஃப்இசட்எஸ் எஃப்ஐ மாடல் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

மேட் ரெட் (புதிய நிற தேர்வு), டார்க் மேட் ப்ளூ, மேட் பிளாக், டார்க் க்நைட் மற்றும் வின்டேஜ் எடிசான் என சிறப்பு தேர்வுடன் இப்பைக் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதுதவிர, சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹெட்லைட், 140மிமீ அளவிலான ரேடியல் டயர் பின்பக்கம் மற்றும் இரு லெவல்கள் கொண்ட சிங்கிள் பீஸ் சேட்டில் ஆகிய சிறப்பு வசதிகளையும் இப்பைக்கில் யமஹா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

எஞ்ஜின்:

எஞ்ஜினைப் பொருத்தவரை பிஎஸ் தரத்திலான 14சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய மோட்டாரே இவ்விரு பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 12.2 பிஎச்பியையும், 13.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதி நவீன வசதிகளுடன் 2021 எஃப்இசட் வரிசை பைக்குகள் அறிமுகம்... என்ன அம்சம் புதுசா சேர்த்திருக்காங்க தெரியுமா? ஆச்சரியம்!!

சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் இந்த எஞ்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியாது. இதற்காக தனி சிறப்பு வசதியும் இப்பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகளை 2021 எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்குகள் பெற்றிருக்கின்ற காரணத்தினால் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Unleashes New & More Versatile FZ Series. Read In Tamil.
Story first published: Monday, February 8, 2021, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X