அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

இதுவரை எந்தவொரு இருசக்கர வாகனமும் பெறாத தோற்றத்தில் புதிய மொபட்டை பிரபல இருசக்கர வாகன நிறுவனம் வியட்நாமில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இருசக்கர வாகனம் பற்றிய முழுமையன தகவலை இப்பதிவில் காணலாம்.

அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

யமஹா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன மாடல்களில் ஆர்15 பைக்கும் ஒன்று. இந்த பைக்கைத் தழுவி புதிய மொபட் ஒன்றை யமஹா வடிவமைத்திருக்கின்றது. எஃப்155 எனும் குறிப்பெயருடன் இந்த மொபட்டை யமஹா நிறுவனம் வியட்நாமில் வெளியீடு செய்திருக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

வியட்நாம் இளைஞர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த புதிய மொபட்டை யமஹா நிறுவனம் நேற்று (ஜனவரி 5) அந்நாட்டில் வெளியீடு செய்தது. யமஹா ஆர்15 பைக்கை முன்மாதிரியாகக் கொண்டு இந்த மொபட் உருவாக்கப்பட்டிருப்பதால் அப்பைக்கில் காணப்படும் சிறப்பு வசதிகளே எஃப்155 மொபட்டிலும் காண முடிகின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

குறிப்பாக, மொபட்டின் ஏரோடைனமிக்ஸ் அமைப்பு ஆர்15 பைக்கை ஒத்ததாக இருக்கின்றது. இந்த உருவ அமைப்பு காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல மொபட்டிற்கு உதவியாக இருக்கும். இதனை மொபட் என்று கூறுவதற்கு பதிலாக ஸ்போர்ட்ஸ் பைக் என்று கூறலாம். அந்தளவிலான சிறப்பு தோற்றத்தையே எஃப்155 மொபட் பெற்றிருக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

இந்த மொபட்டில் சூப்பர் திறனுக்காக 155சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே திறன் கொண்ட எஞ்ஜினையே ஆர்15 பைக்கும் பெற்றிருக்கின்றது. ஆனால், இதன் தோற்றம் மட்டும் மிகவும் தனித்துவமானதாக இருக்கின்றது.

அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

இந்த புதிய பார்வைக்காக டெல்டாபாக்ஸ் ஸ்டைலிலான ஃபிரேம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், சிறப்பு சஸ்பென்ஷன் வசதியை வழங்கும் வகையில் அப்-சைட் டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே இந்த மொபட்டை யமஹா, வியட்நாமில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இதனை முன்மாதிரி மாடலகவே யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் உற்பத்தி மாடல் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகவில்லை.

அட்டகாசமான ஸ்டைலில் வியட்நாமில் அறிமுகமானது புதிய மொபட்... இது எந்த நிறுவனத்துடையது தெரியுமா?

Pic Source: iwanbanaran

இருப்பினும் மிக விரைவில் இதன் உற்பத்தி மாடலை யமஹா அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது புதிய பெயர் மற்றும் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் அது களமிறங்கலாம். இதுமட்டுமின்றி தற்போது இருப்பதைக் காட்டிலும் கூடுதல் கவர்ச்சியான அணிகலன்களைக்கூட இது பெறலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதன் இந்திய வருகை சந்தேகமே என்கிறது தகவல்கள்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Unveild R15 Based F155 Moped Concept. Read In Tamil.
Story first published: Wednesday, January 6, 2021, 9:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X