பெங்களூருக்கு சுற்றுலா போக போறீங்களா? போக்குவரத்து பற்றிய கவலைய விடுங்க... தரமான சேவை ஒன்னு தொடங்கியிருக்கு!

சுற்றுலா பயணிகளைக் கவரும் நோக்கில் தரமான சேவை ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

ஐடி துறை பெருமளவில் வளர்ந்த நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. இங்கு, நமது சென்னையைப் போலவே இந்தியா முழுவதிலும் இருந்தும் இளைஞர்கள் வந்து பணியாற்றுகின்றனர். இந்த நகரத்தில் கப்பன் பூங்கா, பெங்களூரு பேலஸ் மற்றும் லால் பாக் தாவரவியல் பூங்கா என 50க்கும் அதிகமான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

ஆகையால், இந்த நகரத்தில் பணி செய்வோர், சுற்றுலா பயணிகள் என பலர் சூழ காண முடிகின்றது. இந்த நிலையிலேயே சுற்றுலாப் பயணிகள் மற்றும் சில நாள் விசிட் கொடுப்போரைக் கவரும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று வாடகை வாகன சேவையைத் தொடங்கியிருக்கின்றது.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

பிரத்யேகமாக வான் வழி வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த சேவையை கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கியிருக்கின்றது நிறுவனம். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இருசக்கர வாகனம் தொடங்கி நமது தமிழக தயாரிப்பான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் வரை பல நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள்கள் இங்கு வாடகைக்கு கிடைக்கும்.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

ராயல் பிரதர்ஸ் எனும் வாடகை வாகன சேவை நிறுவனமே இந்த சேவையைப் பெங்களூருவில் தொடங்கியிருக்கின்றது. நுழைவு வாயில் 11க்கு அருகில் இதற்கான அலுவலகத்தை நிறுவனம் அமைத்திருக்கின்றது. விமானத்தை விட்டு இறங்கி வெளியேறும் பயணிகளைக் கவரும் நோக்கில் நுழைவாயிலுக்கு நேரெதிரில் அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

இங்கு நேரடியாக விசிட் கொடுத்து தேவையான மோட்டார்சைக்கிளைப் புக் செய்யலாம். இல்லையெனில் ராயல் பிரதர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் (www.royalbrothers.com) வாயிலாகவும் வாடகை வாகனங்களைப் புக் செய்து கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்பிப்பதன் மூலம் உடனடியாக மோட்டார் சைக்கிளை வழங்கப்படும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதன் கராஜ் விமான நிலையத்தில் அமைந்திருப்பதால், வாடகைக்கு எடுக்கப்படும் வாகனங்கள் மீண்டும் அங்கேயேக் கொண்டு வந்து விட வேண்டிய சூழல் நிலவுகின்றது.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

"சில நாட்கள் மட்டுமே பெங்களூருவில் தங்க வந்திருக்கின்றோம்", என கூறும் பயணிகளுக்கு இது நிச்சயம் பலனளிக்கும் என நிறுவனம் நம்புகின்றது. இதுகுறித்து, ராயல் பிரதர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சந்திர சேகர் கூறியதாவது, "எங்களின் வாடிக்கையாளர்களுக்கு பைக் மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய ரைடர்கள் உடை (ஜாக்கெட்), ஹெல்மெட், கையுறை மற்றும் கால் கவசங்கள் என முக்கிய அணிகலன்களையும் வழங்க இருக்கின்றோம்" என கூறினார்.

பெங்களூரு போக போறீங்களா? அப்போ இது உங்களுக்கான தகவல்தாங்க... போகலானாலும் என்னனு தெரிஞ்சிக்கோங்க எதிர்காலத்துல உதவும்...

Source: TOI

வாடகை வாகன சேவைத் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பலர் புக்கிங்கைக் குவித்து வருவதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், சுற்றுலா பயணிகள் மத்தியில் ராயல் பிரதர்ஸ் நிறுவனத்தின் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக உறுதியாக தெரிய வந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
You Can Now Rent Any Kind Of Motorcycle At KIA; Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X