ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா? வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிறங்கடித்த ஓலா!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதி இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, மிக விரைவில் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் அது, அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையிலான சில செயல்களை மேற்கொண்டு வருகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

அதாவது, தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இதன் வாயிலாக இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஓலா திசைத் திருப்பி வருகின்றது. இதுவே அதன் நோக்கமாகவும் இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஓர் புதிய தகவலை ஓலா வெளியிட்டுள்ளது. அதாவது, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியை வழங்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோ வாயிலாக இந்த தகவலை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

ஓலா வெளியிட்டிருக்கும் வீடியோவில் இருசக்கர வாகனம் பின்பக்கமாக (ரிவர்ஸில்) செல்வதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை, "நீங்கள் நம்ப முடியாத வேகத்தில் ஓலா ஸ்கூட்டரை ரிவர்ஸில் இயக்கலாம்" எனும் வாசகத்துடன் வெளியிட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

மேலும், "நம்ப முடியாத விலையான ரூ. 499க்கு முன் பதிவு செய்யலாம்" எனவும் அது தெரிவித்துள்ளது. இத்துடன், மீண்டும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்யும் வகையில் ஆகஸ்டு 15ம் தேதி சந்திக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

இதுமாதிரியான தூண்டல் வேலையை ஓலா செய்து வருகின்றது. ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன் பதிவுகள் கிடைத்து விட்டன. இது புக்கிங் தொடங்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் கிடைத்த புக்கிங் எண்ணிக்கையாகும். ஆகையால், தற்போது இன்னும் பல மடங்கு இதன் புக்கிங் எண்ணிக்கை கூடியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் வரும் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினம் அன்றே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாக இருக்கின்றது. அன்றைய தினமே ஸ்கூட்டரின் விலை மற்றும் இன்னும் பல முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் ரிவர்ஸ் வசதி பற்றிய முக்கிய தகவலை ஓலா வெளியிட்டிருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

ஓலா ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கின்றது. எஸ், எஸ்1 மற்ரும் எஸ்1 ப்ரோ ஆகிய தேர்வுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பத்து விதமான நிற தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

நீலம், மஞ்சள், சிவப்பு, இளம் சிவப்பு, வெள்ளை, வெள்ளியம், அடர் நீலம், கருப்பு ஆகிய நிற தேர்விலேயே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதில் கருப்பு நிறத்தில் மேட் மற்றும் குளாஸ் ஃபினிஷில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 10 விதமான நிற தேர்வில் இது கிடைக்கும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

இதுபோன்று இன்னும் பல சிறப்பு மற்றும் தரமான வசதிகளுடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தயாரிப்பதற்கான உற்பத்தி ஆலை தமிழகத்தின் ஓசூரில் மிக வேகமாக தயாராகி வருகின்றது. அண்மையில் இந்த ஆலை விரைவில் முழுமை அடையும் தருவாயில் இருப்பதாக நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் சமூக வலை தளம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

மிக வேகமாக உருவாகி வரும் இந்த ஆலையே உலகின் மிகவும் பிரமாண்டமான மின் வாகன உற்பத்தி ஆலையாகும். இங்கு மனிதர்கள் மற்றும் தானியங்கி ரோபோக்கள் இணைந்து பணி செய்ய இருக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்களே உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. ஆகையால், மிகவும் பெரிய தயாரிப்பு ஆலையாக இது உருவாகி வருகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் வசதியா?.. வீடியோ வெளியிட்டு இந்தியர்களை கிரங்க செய்த ஓலா! இப்பவே ரொம்ப ஆர்வமாக இருக்கு!

500 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை தயாராகி வருகின்றது. இங்கு வைத்தே தனது எதிர்கால அனைத்து வாகனங்களையும் தயார் செய்ய ஓலா திட்டமிட்டுள்ளது. இந்தியா, ஐரோப்பா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இங்கிருந்தே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. இந்த ஆலையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

Most Read Articles

English summary
You can reverse the ola scooter at an unbelievable pace here is a video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X