இதெல்லாம் ரொம்ப ஓவர்! டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க லாரிக்கு அடியில் ஸ்கூட்டரை நுழைத்த இளைஞர்.. வைரல் வீடியோ!

இளைஞர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க லாரிக்கு அடியில் இருசக்கர வாகனத்துடன் புகுந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இதெல்லாம் ரொம்ப புதுசு... டிராஃபிக்கை தவிர்க்க லாரிக்கு அடியில் புகுந்து இளைஞர்... வைரல் வீடியோ!!

குறுக்கே நிற்கும் லாரிக்கு அடியில் வாகனங்கள் புகுந்து செல்லும் நிகழ்வெல்லாம் சினிமாவில் மட்டுமே அரங்கேறும் என நினைப்பவரா நீங்கள்?, அப்படி ஏதாவது ஓர் எண்ணம் இருந்தா இன்னையோடு அத அழிச்சுடுங்க. குறுக்கே நின்ற லாரியை கடப்பதற்காக இளைஞர் செய்திருக்கும் ஓர் காரியம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இதெல்லாம் ரொம்ப புதுசு... டிராஃபிக்கை தவிர்க்க லாரிக்கு அடியில் புகுந்து இளைஞர்... வைரல் வீடியோ!!

ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரில் தலைக்கவசம்கூட இல்லாமல் வரும் ஓர் இளைஞர் சாலைக்கு குறுக்கே நின்றுக் கொண்டிருந்த லாரிக்கு அடியில் புகந்து செல்வதுபோன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை இட்ஸ் சைனி விமல் எனும் இன்ஸ்டா பயனர் வெளியிட்டிருக்கின்றார்.

இதெல்லாம் ரொம்ப புதுசு... டிராஃபிக்கை தவிர்க்க லாரிக்கு அடியில் புகுந்து இளைஞர்... வைரல் வீடியோ!!

இணையத்தில் இவ்வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகின்றது. இதுவரை சுமார் 12,33,640 லைக்சுகளை இவ்வீடியோ பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, இவ்வீடியோவை பலர் ட்ரோல் செய்தும், மீம் போட்டும் நக்கலடித்து வருகின்றனர். பலர் லாரிக்கு அடியில் புகுந்து செல்லும் இளைஞரை பார்த்து 'டார்சான் 2.0' என அழைக்கவும் தொடங்கியிருக்கின்றனர்.

இதெல்லாம் ரொம்ப புதுசு... டிராஃபிக்கை தவிர்க்க லாரிக்கு அடியில் புகுந்து இளைஞர்... வைரல் வீடியோ!!

சினிமாவில் கூட இதுவரை கார்கள் மட்டுமே லாரிக்கு அடியில் புகுந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுவும், இதுமாதிரியான காட்சிகளில் மிக சிறிய (கூபே ரக) கார்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த மாதிரியான சூழ்நிலையில் சினிமா காட்சியில்கூட ஸ்கூட்டர்கள் பயன்படுத்தப்படாதநிலையில் இளைஞர் ஸ்கூட்டரைக் கொண்டு லாரியைக் கடந்திருக்கின்றார்.

இதெல்லாம் ரொம்ப புதுசு... டிராஃபிக்கை தவிர்க்க லாரிக்கு அடியில் புகுந்து இளைஞர்... வைரல் வீடியோ!!

இளைஞரின் இந்த செயலினாலயே லாரிக்கு அடியில் ஸ்கூட்டரால் புகுந்து செல்ல முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. பொதுவாக, இதுபோன்ற க்ராஸிங் செயல்களெல்லாம் ரயில்வே கேட்களிலும் மட்டுமே நம்மால் காண முடியும். ஆகையால், லாரியை இருசக்கர வாகனம் கடந்திருப்பது விந்தையான செயலாக அமைந்துள்ளது.

இதெல்லாம் ரொம்ப புதுசு... டிராஃபிக்கை தவிர்க்க லாரிக்கு அடியில் புகுந்து இளைஞர்... வைரல் வீடியோ!!

இதுபோன்ற வாகனங்களின் அடிப்பகுதியில் புகுந்து கடப்பது என்பது மிகவும் ஆபத்தான செயல்களில் ஒன்றாகும். அவசரத்திற்காக செய்யக்கூடிய இந்த செயல் பெரும் ஆபத்தை நொடிப்பொழுதில் ஏற்படுத்துவிடும் என்பதை இவ்வாறு செய்யும் ஒருநிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இணையவாசிகள் மத்தியில் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த பகுதி என்பதுகுறித்த துள்ளியமான தகவல் தெரியவரவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
YoungMan Went Under The Truck With Scooter To Avoid A Traffic Jam. Read In Tamil.
Story first published: Friday, April 9, 2021, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X