100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

பிரபல சாப்பாடு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ இந்தியர்களுக்கு ஓர் வாக்குறுதியை அளித்துள்ளது. அதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

பிரபல சாப்பாடு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தற்போது வரை அதன் டெலிவரி சேவையில் பெரும்பாலும் பெட்ரோலால் இயங்கும் வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றது. இந்த நிலையை மாற்றும் வகையில் ஓர் அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

அதாவது நிறுவனம் 100 சதவீதம் மின்வாகனம் பயன்பாட்டிற்கு மாற்றப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உற்ற நண்பனாக செயல்படும் திறன்கொண்டவை மின் வாகனங்கள். இவை துளியளவும் காற்றை மாசுபடுத்தும் உமிழ்வுகளை வெளியேற்றாது.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

மேலும், பெட்ரோல்-டீசல் விலையுயர்வில் இருந்தும் பாக்கெட்டைக் காப்பாற்ற உதவும். இதுமாதிரியான காரணங்களுக்கு மக்கள் பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், தங்களின் பங்காக சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை மட்டுமே தங்களின் டெலிவரி சேவையில் பயன்படுத்த இருக்கின்றோம் என சொமேட்டா அறிவித்துள்ளது.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

இன்னும் 9 ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டுவிடும் என்ற கால இலக்கையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதாவது, 2030ம் ஆண்டிற்குள் அனைத்து எரிபொருள் வாகனங்களும் நீக்கப்பட்டு மின் வாகனங்கள் மட்டும் பயன்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தீபீந்தர் கோயல் கூறியதாவது, "100% மின்சார வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் இது அவசியம். கொரோனா இக்கட்டான சூழ்நிலையால் மின்வாகனங்களை தத்தெடுக்கும் விகிதம் லேசாக குறைந்திருக்கின்றது" என்றார்.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

தற்போது, டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் குறைந்தளவில் மின்சார வாகனங்கள் களமிறக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருக்கின்றன என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிக சிறிய பகுதியே என கூறியிருக்கும் நிறுவனம், வரும் 2030ம் ஆண்டிற்குள் நூறு சதவீதம் மின்சார வாகனங்களை தத்தெடுக்க இருப்பதாகக் கூறியிருக்கின்றது.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

நாடு முழுவதும் தற்போது வரை மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி தட்டுப்பாடுடன் காட்சியளிக்கின்றது. மின் வாகன விற்பனை இந்தியாவில் சற்றே வளர்ச்சியடைந்து தென்பட்டாலும், அது தற்போதும் குழந்தை பருவத்திலேயே இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதற்கு போதியளவு சார்ஜிங் மையங்கள் இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.

100சதவீதம் மாற்றப்படும்... வாக்குறுதி கொடுத்த சொமேட்டோ... ஆச்சரியத்தில் இந்தியர்கள்... இது செம்ம பிளான்...

இந்த நிலையைக் கலைக்கும் முயற்சியில் அரசும் சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆகையால், நாட்டில் மின் வாகன பயன்பாடு பெருமளவில் உயரும் என நம்பப்படுகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே மிக குறைந்த வேகத்தில் மின் வாகனங்களை தத்தெடுத்து வருவதாக சொமேட்டோ தெரிவித்திருக்கின்றது. இருப்பினும், மிக விரைவில் இதன் அதிகரிக்கப்பட்டு இலக்கு வருவதற்குள் லட்சியம் நிறை வேற்றப்படும் எனவும் அது கூறியுள்ளது.

Most Read Articles

English summary
Zomato Planning To Adopt 100 Percent Electrification Of Its Delivery Vehicle Fleet. Read In Tamil.
Story first published: Tuesday, June 8, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X