2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

2022 பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கிற்கு புதியதாக கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்திலும் மாறிவரும் கால ஓட்டத்திற்கு ஏற்ப அப்டேட்கள் வழங்கி வருவது நமக்கு தெரிந்த விஷயமே. அதிலிலும் குறிப்பாக, இருசக்கர வாகனங்களுக்கு ஒரே வருடத்தில் பலமுறை அப்டேட்கள் வழங்கப்படுவதும் உண்டு. ஏனெனில் மாதத்தோறும் லட்சக்கணக்கில் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகுகின்றன.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

ஒரே மாதிரியான தோற்றத்திலான பைக்குகளை வாங்க நம்மில் பெரும்பாலானோர் விரும்ப மாட்டோம். அதுமட்டுமில்லாமல் விற்பனையை அதிகரிக்க இவ்வாறான மாற்றங்களை வழங்க வேண்டியது தயாரிப்பு நிறுவனங்களின் கடமை ஆகும். இந்த வகையில் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரபலமான பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கவர்ச்சிக்கரமான அப்டேட் ஒன்றினை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக யுடியூப் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினைதான் மேலே காண்கிறீர்கள். பல்சர் என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 பைக்குகளில் அலாய் சக்கரங்கள் தனித்து தெரியும் வகையில் வெள்ளை நிறத்தில் வழங்கப்படுவது வழக்கம். இந்த 200சிசி பல்சர் பைக்குகளின் வெள்ளை நிற அலாய் சக்கரங்கள் வாடிக்கையாளர்களை தாண்டி பைக் ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

இருப்பினும் பஜாஜ் மீண்டும் இந்த அலாய் சக்கரங்களின் நிறத்தில் மீண்டும் பழைய பாணிக்கே சென்றுள்ளது. அதாவது மற்ற பெரும்பான்மையான பைக்குகளை போன்று 2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில், வெள்ளை நிற அலாய் சக்கரங்களை போன்று கருப்பு நிற அலாய் சக்கரங்களும் என்எஸ்200 -க்கு மிகவும் எடுப்பாக உள்ளது.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

இன்னும் சொல்ல போனால், வெள்ளை நிற அலாய் சக்கரங்களை காட்டிலும் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் சரியான முடிவாகவே தெரிகிறது. ஏனெனில் வெள்ளை நிற அலாய் சக்கரங்கள் என்எஸ்200 பைக்கின் மற்ற ஸ்டைலிங் அம்சங்களை கவனிக்க விடாமல் பார்ப்போரை தன் பக்கம் இழுத்துவிடுகிறது. ஆனால் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் பைக்கோடு நன்கு ஒன்றிப்போய் உள்ளன.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

இதனால் இயக்கத்தின்போதும் சரி, ஓய்வு நிலையில் இருக்கும்போதும் சரி என்எஸ்200 -இன் மேற்பகுதி முதலாவதாக நமது கண்ணில்படும். மேலும், இந்த கருப்பு நிற அலாய் சக்கர தேர்வு தற்போதைக்கு என்எஸ்200 சிவப்பு நிற பைக்கிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு நிற அலாய் சக்கரங்களின் ரிம்களில் பைக்கின் மேற்பகுதியின் சிவப்பு நிற தொடுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

என்எஸ்200 பைக்கின் வெள்ளை நிற அலாய் சக்கரங்களுக்கு சில ரசிகர்கள் மத்தியில் இருந்து எதிர்மறையான கருத்துகள் வெளிவந்திருக்கும் என நினைக்கிறேன். இதனால் புதிய முயற்சியில் பஜாஜ் ஆட்டோ இறங்கியுள்ளது. பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு இந்த உமிழும் நெருப்பின் சிவப்பு நிறத்தேர்வு மட்டுமின்றி, மெட்டாலிக் பேர்ல் வெள்ளை, சாடின் நீலம் மற்றும் பியூட்டர் க்ரே என மொத்தம் 4 விதமான பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

ஏற்கனவே கூறியதுபோல், இதில் என்எஸ்200 பைக்கின் சிவப்பு நிறத்தேர்வுக்கு மட்டுமே புதியதாக கருப்பு நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மூன்றும் வழக்கம்போல் வெள்ளை நிற அலாய் சக்கரங்களுடனே கிடைக்கும். புதிய கருப்பு நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதினால் என்எஸ்200 -இன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சமீபத்தில் இந்த பைக்கின் விலையினை ரூ.2,000 வரையில் பஜாஜ் நிறுவனம் உயர்த்தி இருந்தது.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

இதற்கும் புதிய கருப்பு நிற அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டிருப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம். பல்சர் என்எஸ்200 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.36 லட்சமாக உள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு என்எஸ்200 -இல் 199.5சிசி லிக்யுடு-கூல்டு, ட்ரிபிள் ஸ்பார்க் மோட்டார் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-இல் 24.5 பிஎஸ் மற்றும் 8,000 ஆர்பிஎம்-இல் 18.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2022 பல்சர் என்எஸ்200 பைக்கிற்கு கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள்!! பஜாஜின் புதிய முயற்சி!

பெரிமீட்டர் சட்டகத்தில் உருவாக்கப்படும் இந்த நாக்டு பல்சர் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் சார்ந்த மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங் பணியை கவனிக்க சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் இந்த பைக்கின் 17-இன்ச் சக்கரங்களில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2022, 11:29 [IST]
English summary
2022 bajaj pulsar 200 ns gets black alloys
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+