விரைவில் அறிமுகமாக இருக்கும் 2022 ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 2022 ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் (2022 Hero Optima CX) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

நாட்டின் முதன்மையான மின் வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ எலெக்ட்ரிக் விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்று வருகின்றது. சென்ற மார்ச் மாதத்தில் கூட இந்நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

ஆகையால், நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமே முதல் இடத்தில் உள்ளது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 13,022 யூனிட் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அமோகமான விற்பனை எண்ணிக்கையை வரும் காலங்களிலும் பெற வேண்டும் என்பதில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக உறுதியுடன் இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

இதன் அடிப்படையில் சில புதுமுக மின் வாகனங்களை நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், ஹீரோ எலெக்ட்ரிக் வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் தயாரிப்பே 2022 ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் (2022 Hero Optima CX) எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரங்களே தற்போது இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

அதாவது, தயாரிப்பை முழுமையாக விவரிக்கக் கூடிய சிற்றேடு எனப்படும் ப்ராச்சர் (Brochure) கசிந்துள்ளது. இதன் வாயிலாக ஹீரோ ஆப்டிமா எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ன மாதிரியான வசதிகள் மற்றும் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதன் விலை விபரமும் கசிந்துள்ளது. ரூ. 62,190 என்ற ஆரம்ப விலையில் இருந்து இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என ப்ராச்சர் கூறுகின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

இதுபோன்ற இன்னும் பல முக்கிய தகவல்களே தற்போது கசிந்துள்ளன. இவற்றையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இ-ஸ்கூட்டர் சிஎக்ஸ் (CX) மற்றும் சிஎக்ஸ் இஆர் (CX ER -Extended Range) என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

இவ்விரு வேரியண்டுகளுக்கும் இடையில் பேட்டரி பேக் மட்டுமே வித்தியாசத்துடன் இருக்கின்றது. அதாவது, சிஎக்ஸ் வேரியண்டைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடியதாக சிஎக்ஸ் இஆர் இருக்கின்றது. அதேநேரத்தில், தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகம் திறன் வெளிப்பாட்டு வசதியுடன் புதிய வெர்ஷன்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

இதேபோல் எலெக்ட்ரிக் மோட்டார்களும் முன்பை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியதாக மாற்றப்பட்டிருக்கின்றது. தற்போது கசிந்திருக்கும் ப்ராச்சர் வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது. ஆப்டிமா மின்சார ஸ்கூட்டர்களில் 52.2Volt, 30ah லித்தியம் ஃபெர்ரோ பாஸ்பேட் (Lithium Ferro Phosphate) பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

நாங்கள் ஏற்கனவே கூறியதை போல் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் சிஎக்ஸ், சற்றே குறைவான மைலேஜாக ஓர் முழுமையான சார்ஜில் 82 கிமீ ரேஞ்ஜையும், சிஎக்ஸ் இஆர் அதிகபட்சமாக 140 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இத்தகைய மிகப் பெரிய ரேஞ்ஜ் வித்தியாசமே இரு மின்சார ஸ்கூட்டர்களுக்கும் இடையில் நிலவுகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 1.2kW (1.6 பிஎச்பி) பவரை வெளியேற்றக் கூடிய 550 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ எனும் வேகத்தில் மட்டுமே செல்லும். தற்போது விற்பனையில் ஹீரோ ஆப்டிமா எச்எக்ஸ் மாடலைக் காட்டிலும் அதிக ஸ்பீடு ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டர் மணிக்கு 42 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

சார்ஜிங் நேரம் இரு வேரியண்டுகளுக்கும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றது. சிஎக்ஸ் மற்றும் சிஎக்ஸ் இஆர் ஆகிய இரு வேரியண்டுகளையும் முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணி நேரங்கள் தேவைப்படும் என வெளியாகியிருக்கும் ப்ராச்சர் கூறுகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ் இ-ஸ்கூட்டர்... இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்கள்! இவ்ளோ விலை கம்மியா!!

சிறப்பம்மசங்களை பொருத்தவரை க்ரூஸ் கன்ட்ரோல், வால்க் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எல்இடி ஹெட்லேம்ப், ரிமோட் கீ மற்றும் ஆன்டி தெஃப்ட் அலாரம் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன் 12 இன்ச் வீல்கள் 90/90 ட்யூப் லெஸ் டயர்களும் மின்சார ஸ்கூட்டர்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Source: Elevahan

More from DriveSpark

Article Published On: Tuesday, April 5, 2022, 11:03 [IST]
English summary
2022 hero optima cx e scooter launch soon here is full details leaked via brochure
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+