கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

அப்டேட் செய்யப்பட்ட 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த அட்வென்ச்சர் பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

பிரபலமான ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹோண்டாவில் இருந்து பல்வேறு நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டுவரும் அட்வென்ச்சர் பைக்குகள் ஒன்று சிபி500எக்ஸ் ஆகும். இந்தியாவிலும் ரூ.6.87 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த நடுத்தர-அளவு என்ஜின் கொண்ட பைக் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில்தான் தற்போது 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் மோட்டார்சைக்கிள் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் சில சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் குறைவுதான் என்றாலும், அவை அனைத்தும் பைக்கை புத்துணர்ச்சியானதாகவும், செயல்திறன்மிக்கதாகவும் மாற்றக்கூடியவைகளாக உள்ளன.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இதன்படி சிபி500எக்ஸ் பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன் யூனிட்டாக வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்கிற்கு மாற்றாக, புதிய அட்ஜெஸ்ட் செய்ய முடியாத 41மிமீ ஷோவா SFF-BP யுஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. 132மிமீ சஸ்பென்ஷன் டிராவல் உடன் புதியதாக மாற்றப்பட்டுள்ள இந்த முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பினால் இந்த அட்வென்ச்சர் பைக்கின் ரைடிங் நிலைப்பாடு சற்று மாற்றம் கண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

மேலும், இந்த அப்டேட் சிபி500எக்ஸ் பைக்கின் அட்வென்ச்சர் பண்பையும் மெருக்கேற்றும் வகையில் வழங்கப்பட்டிருக்கும் என நம்புகிறோம். இதனுடன் 2022 சிபி500எக்ஸ் பைக்கின் முன்பக்கத்தில் புதிய அலுமினியத்திலான சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த பைக்கில் முன்பு பொருத்தப்பட்ட சக்கரத்தை காட்டிலும் கிட்டத்தட்ட 100 கிராம் வரையில் எடை குறைவானது ஆகும்.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இவை மட்டுமின்றி பைக்கின் முன்பக்க பிரேக்கிங் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை படங்களில் கவனிக்கலாம். வழக்கமான 310மிமீ ஒற்றை டிஸ்க் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக இரட்டை-பிஸ்டன் நிஸின் காலிபர்களுடன் 296மிமீ அளவில் இரட்டை டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய இயந்திர பாகங்கள் நிச்சயமாக புதிய சிபி500எக்ஸ் பைக்கில் பயண அனுபவத்தை மாற்றும்.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இத்துடன் அப்டேட் லிஸ்ட் நின்றுவிடவில்லை. 2022 சிபி500எக்ஸ் பைக்கில் புதிய ஸ்விங்கார்மையும் ஹோண்டா வழங்கியுள்ளது. இது முந்தைய ஸ்விங்கார்மை காட்டிலும் 1 கிலோ வரையில் எடை குறைவானது என்றாலும், கூடுதல் வலிமைமிக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில் நெகட்டிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இவ்வாறு பைக்கின் இயந்திர பாகங்களிலேயே ஹோண்டா கை வைத்திருக்கும்போது, பெயிண்ட் தேர்வையும் அப்டேட் செய்திருக்காதா என்ன...! ஏனெனில் இயந்திர பாகங்களில் மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை என்றாலும், குறைந்தப்பட்சம் வாகனத்திற்கு புதிய ஆண்டிற்கான அப்டேட்டாக புதிய நிறத்தேர்வுகளை வழங்க எந்தவொரு நிறுவனமும் முயற்சிக்கும். இந்த வகையில் புதிய பேர்ல் ஆர்கானிக் பச்சை/ கருப்பு பெயிண்ட் தேர்வு 2022 சிபி500எக்ஸ் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இவை தவிர்த்து ஹோண்டாவின் இந்த அட்வென்ச்சர் பைக்கின் மற்ற அம்சங்கள் எதிலிலும் மாற்றமில்லை. சிபி500எக்ஸ் மாடலில் 471சிசி, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 47.6 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 43.2 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக் விற்பனையில் உள்ளதால், புதிய சிபி500எக்ஸ் எப்போது இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதுதான் தற்சமயம் கேள்வியாக உள்ளது. உலகளவில் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளதால் இதன் இந்திய அறிமுகத்தினை மிக விரைவில் எதிர்பார்க்கலாம். ரூ.6.87 லட்சமாக உள்ள இதன் தற்போதைய விலையில் அட்ப்டேட்களுக்கு ஏற்ப அதிகரிப்பு கொண்டுவரப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

ஹோண்டாவின் இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு இந்தியாவில் விற்பனையில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பெனெல்லி டிஆர்கே502/ 502எக்ஸ் முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன. அத்துடன் மற்ற ஜப்பானிய அட்வென்ச்சர் பைக்குகளான கவாஸாகி வெர்ஸஸ் 650 மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி -யும் தோற்றத்தில் சிபி500எக்ஸ் பைக்கிற்கு போட்டியாக உள்ளன.

கூடுதல் செயல்திறன்மிக்கதாக, 2022 ஹோண்டா சிபி500எக்ஸ் அட்வென்ச்சர் பைக்!! இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இத்தகைய நடுத்தர-அளவு என்ஜினை கொண்ட மாடலை வாங்க முடியாதவர்களுக்காகவே, 200சிசி-யில் சிபி200எக்ஸ் அட்வென்ச்சர் பைக்கையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதியில் களமிறக்கப்பட்ட சிபி200எக்ஸ் தோற்றத்தில் கிட்டத்தட்ட சிபி500எக்ஸ் மாடலை ஒத்து காணப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 12, 2022, 7:31 [IST]
English summary
2022 honda cb500x unveiled design features engine launch soon details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+