கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை... தனி ஆளாக கெத்து காட்டும் ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த செப் மாதம் மற்றும் 2022ம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு விற்பனை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நிறுவனம். இந்நிறுவனத்தின் வாகனங்களை இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த வாகனம் இளைஞர்களுக்கு ஒரு விதமான சமூக அந்தஸ்தைத் தருவதாக அவர்கள் நம்புகின்றனர். இந்நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை எல்லாம் அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கடந்த செப்., மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன் படி ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 85,097 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப் மாதம் இந்நிறுவனம் மொத்தமே 33,529 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது இந்தாண்டு இரண்டு மடங்கிற்கும் அதிகமான வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டு உற்பத்தியைப் பொருத்தவரை கடந்த செப்டம்பர் மொத்தம் 73,646 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப் மாத உள்நாட்டு விற்பனையுடன் ஒப்பிட்டால் மொத்தம் 27,233 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

இதே போல ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 8451 வாகனங்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு இதே செப்டம்பர் மாதம் வெறும் 6296 வானகங்களை மட்டுமே அந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளை நாம் 2 வகைகளாகப் பிரிக்க முடியும் ஒன்று 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் கொண்ட வாகனங்கள் மற்றொன்று 350 சிசிக்கு அதிக திறன் கொண்ட இன்ஜினை உடைய வாகனங்கள்

இப்படியாகப் பார்த்தால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 90 சதவீதம் 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் தான். இந்த செக்மெண்டில் கடந்த மாதம் மட்டும் மொத்தம் 74,206 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்., மாத விற்பனையை ஒப்பிடும் போது 25,520 வானகங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. மொத்தமாக 48,686 வானகங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது 190.78 சதவீத வளர்ச்சியாகும்.

350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களைப் பொருத்தவரை மொத்தம் 7891 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப் மாத விற்பனையான 8009 வாகனங்களுடன் ஒப்பிடும் போது 118 வாகனங்கள் குறைவு இது 1.47 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.

இதுவே இந்த செப்டம்பர் மாத விற்பனையைக் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் கொண்ட செக்மெண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 62,236 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது இந்த மாதம் 19.23 சதவீத வளர்ச்சியாகும். 350 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட செக்மெண்டில் 7876வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதை விடச் செப்டம்பர் மாதம் 15 வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இது 0.19 சதவீத வளர்ச்சியாகும்.

இது போக கடந்த செப் மாதத்துடன் இந்த 2022ம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஜூலை மாதம் முதல் செப் மாதம் வரை மொத்தம் 1,83,067 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 1,41,252 வாகனங்கள் மட்டும் விற்பனையாகியிருந்தது.

இந்தாண்டு இரண்டாம் காலாண்டில் மொத்தம் 1,57,642 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு செப் மாத விற்பனையைப் பொருத்தவரை 29.60 சதவீத வளர்ச்சியும் கடந்த காலாண்டின் விற்பனையைப் பொருத்தவரை 16.13 சதவீத வளர்ச்சியையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








