ராயல் என்பீல்டு ஹண்டர்350 தொடங்கி டிவிஎஸ் ரோனின் வரை... 2022ல் விற்பனைக்கு வந்த மிக சிறந்த டாப்5 பைக் மாடல்கள்

நடப்பு 2022 ஆம் ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்கு மிக சூப்பரான பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. எப்போ விற்பனைக்கு வருமோ என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சில இருசக்கர வாகன மாடல்கள்கூட இந்த ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான ஐந்து மிக சிறந்த அறிமுகங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, 2022 ஆம் ஆண்டில் அறிமுகமாகிய மிக சிறந்த பைக் மாடல்களின் லிஸ்டை பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டிவிஎஸ் ரோனின் (TVS Ronin):

இந்தியாவில் ரெட்ரோ கிளாசிக் ரக பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்த சந்தையைக் குறி வைத்து டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்த மாடலே ரோனின். இந்த பைக்கின் வருகையை இந்திய சந்தை வெகு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த 2022 ஆம் ஆண்டிலேயே அது நிறைவேறியது. இந்த பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மற்றும் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் உள்ளிட்ட இருசக்கர வாகன மாடல்களுக்கு போட்டியளிக்கும் வகையில் டிவிஎஸ் விற்பனைக்குக் களமிறக்கி உள்ளது.

சிறந்த பைக்குகள்

இந்த பைக்கில் சிறப்பு வசதிகளாக வட்ட வடிவ ஹெட்லேம்ப், டியர் டிராப் ஃப்யூவல் டேங்க், அகலமான மட்குவார்ட், கோல்டன் வண்ண அப்சைடு டவுன் ஃபோர்க், ஸ்லிம்மான இருக்கை மற்றும் கன்வென்ஷனல் கைப்பிடி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளாக ஸ்மார்ட்எக்ஸோன்னெக்ட் இணைப்பு வசதி ரோனின் பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக எண்ணற்ற வசதிகளை பைக்கின் திரையில் ரைடரால் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

திருப்பத்திற்கு திருப்பம் வழி பற்றிய தகவலை வழங்குதல், ரேஸ் டெலிமேட்ரி, குறைவான எரிபொருள் இருக்கும் எனில் அதுகுறித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம், கிராஷ் அலர்ட், அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை அறியும் வசதி என பல சிறப்புகள் ரோனின் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கில் 225 சிசி மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் 20 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த மோட்டார் இயங்கும். ரோனின் பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த உச்சபட்ச வேகத்தைக் கட்டுப்டுத்தும் விதமாகவே இப்பைக்கை டிவிஎஸ் நிறுவனம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவத்திருக்கின்றது.

யமஹா எஃப்இசட் 25 (Yamaha FZ25):

யமஹா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக எஃப்இசட்-25 மாடல் இருக்கின்றது. இந்த பைக்கின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷன் 2022 இன் ஜனவரியில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. எதிர்பார்த்திராத சிறப்பு வசதிகள் பலவற்றுடன் இது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, பைக்கின் ஸ்டைலில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டு அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இத்துடன், நவீன வசதிகள் சிலவும் இந்த புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன. ஆகையால், நடப்பாண்டின் மிக சிறந்த வருகைகளில் இதுவும் ஒன்றாக காட்சியளிக்கின்றது.

இந்தி பைக்கில் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.5 பிஎச்பி மற்றும் 20.1 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த மோட்டாரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழு எல்இடி தர புரஜெக்டர் ரக எல்இடி ஹெட்லைட், எல்இடி தர டிஆர்எல் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற மிக சூப்பரான அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன. இதுமட்டுமின்றி, எஞ்ஜின் கட்-ஆஃப் தொழில்நுட்பம், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் போன்ற ஆக சிறந்த அம்சங்கள் எஃப்இசட் 25 பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஜாவா 42 பாபர் (Jawa 42 Bobber):

ஜாவா நிறுவனம் மிக சமீபத்திலேயே 42 பாபர் பைக் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகமாக இதற்கு ரூ. 2.06 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. தனது புகழ்பெற்ற பெராக் மாடலை தழுவியே இந்த பைக்கை ஜாவா உருவாக்கியிருக்கின்றது. இதனை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, ஜாவா. இத்தகையை வசதியை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுப்பது இதுவே முதல் முறையாகும். ஜாவா 42 பாபருக்கு மட்டுமே இது பொருந்தும்.

பைக்கின் அழகிய தோற்றத்திற்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக புதிய வட்ட வடிவ ஹெட்லேம்ப், இன்டிபென்டன்ட் கடிகார கன்சோல், புதிய ஹேண்டில் பார், புதிய ஃப்யூவல் டேங்க் மற்றும் மறு-வடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கை உள்ளிட்டவற்றை ஜாவா வழங்கியிருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கன்சோல் எல்சிடி திரை ஆகும். இதில், புதிய ஸ்விட்ச்கியர் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. 42 பாபர் பைக்கில் ஃப்ளோட்டிங் ரக இருக்கையே ஜாவா கொடுத்துள்ளது.

ஏற்கனவே கூறியதை போல் இந்த இருக்கையை இரு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். முன் மற்றும் பின் என நகர்த்திக் கொள்ளும் வசதியே வழங்கப்பட்டு உள்ளது. 334 சிசி மோட்டாரே ஜாவா 42 பாபரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 30.64 பிஎஸ் பவரையும், 32.74 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இம்மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. ரீ-ட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், ரீ-கேலிபரேட்டட் பிரேக்குகள், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை இருசக்கர வாகனத்தின் மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.

பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160):

பஜாஜ் நிறுவனம் நடப்பு ஆண்டில் ஓர் அதிர்ச்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டது. அது, இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் நாட்டில் விற்பனையில் இருந்த பல்சர் 150 பைக்கை சந்தையை விட்டு வெளியேற்றியது. இதன் இடத்தை பி150 மாடலைக் கொண்டு அது நிரப்பி இருக்கின்றது. இந்த அதிர்ச்சிகரமான காரியத்தை செய்யும் சில காலங்களுக்கு முன்னரே மிக சூப்பரான ஓர் பைக் மாடலாக என்160-யை பஜாஜ் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த பைக்கில் சிறப்பு வசதிகளாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சிறிய வின்ட்ஸ்கிரீன், ஒய் வடிவ அலாய் வீல்கள், ஸ்பிளிட் டைப் கிராப் ரெயில்கள், அன்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இது தவிர பாதுகாப்பான ரைடை வழங்குவதற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகின்றது. அதேவேளையில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தேர்விலும் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த பைக்கில் என்160 பைக்கில் 164.8 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 16 பிஎஸ் மற்றும் 14.65 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 5 ஸ்பீடு கியர்பாகஸில் இயங்கும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350):

இந்த பைக்கை இந்தியர்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பு என கூறலாம். நீண்ட காலமாக இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் இந்த பைக் நடப்பு 2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 7லேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளைக் காட்டிலும் விலை குறைவான இருசக்கர வாகனமாக இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த பைக்கில் 350 பைக்கில் 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர் மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது.

இது 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் விற்பனைக்கு வந்த மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் யூனிட்டுகள் ஹண்டர் 350 விற்பனையாகின. இரு விதமான வெர்ஷன்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரெட்ரோ மற்றும் மெட்ரோ வெர்ஷனிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 27, 2022, 10:26 [IST]
English summary
2022 top 5 best twowheeler launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+